எள்ளு துவையல்
மூட்டு தேய்மானம், எலும்பு பலம் குறைதல் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எள்ளு ஒரு அருமருந்தாகும். இதுமட்டுமல்லாமல் எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், ‘ஏ, பி’ ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும். மேலும், முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் தீரும். உடலுக்கு நன்மை தரக்கூடிய எள்ளுத் துவையல் எப்படி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருப்பு அல்லது வெள்ளை எள் – 1/2 கப்
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
கடுகு – ¼ ஸ்பூன்
பூண்டு – 2 பல்
காய்ந்த மிளகாய் – 5
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – எலுமிச்சை பழ அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
- எள்ளு துவையல் செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை சூடு செய்து அதில் எள்ளை சேர்த்து வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் வாணலியில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- பின் பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடத்திற்கு வதக்கவும்.
- சிறிது நேரம் சூடு ஆறியதும் வறுத்து பொருட்களை மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
- அத்துடன் வறுத்து வைத்துள்ள எள்ளை சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- தாளிப்பு கரண்டியில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலுடன் சேர்த்து பரிமாறினால் சுவையான எள்ளுத் துவையல் ரெடி.
.