இறால் கட்லட்
- இறால் – ½ கிலோ
- பெரிய வெங்காயம் – 1 ( பொடியாக நறுக்கியது )
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- பச்சைமிளகாய் – 1 ( பொடியாக நறுக்கியது )
- உருளை கிழங்கு – 2 ( வேக வைத்து மசித்தது )
- மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
- மிளகுத்தூள் – ½ ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
- சோள மாவு – ½ கப்
- பிரட் தூள் – 1 கப்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
- இறால் கட்லட் செய்வதற்கு முதலில் இறாலை தோல் நீக்கி சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- சுத்தம் செய்த இறாலுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- இறால் முக்கால் பாகத்திற்கு வெந்தவுடன் தண்ணீரை வடித்து ஆற வைக்கவும்.
- இறால் சூடு முழுமையாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்.
- வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பின்னர் ½ ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் மிளகாய் தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இத்துடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைகிழங்கை சேர்க்கவும்.
- உருளைகிழங்கை சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி கிளறி ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
- ஒரு சிறிய பாத்திரத்தில் ½ கப் அளவிற்கு சோள மாவு சேர்த்துக் கொள்ளவும்.
- இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- பிரட் தூள் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.
- சூடு ஆறியதும் இறால் மசாலாவை கட்லட் வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.
- சோள மாவு கலவையில் முக்கி எடுத்து பிரட் தூளில் பிரட்டி எடுத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் பிரட் தூளில் பிரட்டி வைத்துள்ள கட்லட்டை எண்ணெய் சேர்த்து பொறித்து எடுத்தால் சுவையான இறால் கட்லட் ரெடி.