பைனாப்பிள் கேசரி செய்முறை
தேவையான பொருட்கள்
- ரவை – 1 கப்
- சர்க்கரை – ¾ கப்
- தண்ணீர் – 2 கப்
- கேசரி கலர் – சிறிதளவு
- அன்னாசிபழத் துண்டுகள் – ½ கப்
- நெய் – தேவையான அளவு
- முந்திரி, திராட்சை – சிறிதளவு
செய்முறை
- முதலில் ஒரு நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.
- நெய் சூடானதும் அதில் முந்திரி திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின் அதே கடாயில் 1 கப் ரவை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
- பின்னர் ஒரு பேனில் சிறிது நெய் சேர்த்து அதில் அன்னசிபழத்தை சேர்த்து சிறது நேரம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- பின் பேனில் 2 கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் கேசரி கலர் சேர்த்து கொள்ளவும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து கை விடாமல் கிளறவும்.
- ரவையை வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.
- சர்க்கரை கரைந்தவுடன் வதக்கி வைத்துள்ள அன்னசிபழத்துண்டுகள் மற்றும் சிறிதளவு அன்னாசி பழ ஜூஸ் சேர்த்து சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- பின்னர் வறுத்த முந்திரி திராட்சை, சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- கடைசியாக கொஞ்சம் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான பைனாப்பிள் கேசரி ரெடி.