உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்
நம் அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசை. ஆனால் பலருக்கும் அது நடப்பதில்லை. காரணம் நாம் வாழும் வாழக்கை முறை, உணவு பழக்க வழக்கம், நேரத்திற்கு தூங்காமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது. இது போன்ற பல காரணங்களால் நமது உடலில் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது.
பணம், புகழ், உறவினர்கள், சொந்தம், பந்தம், என எது இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இல்லை என்றால் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது. பணம் சம்பாதிப்பதை காட்டிலும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
நோய், நொடியின்றி ஆரோக்கியமாக இருந்தாலே எந்த ஒரு செயலையும் நம்மால் சிறப்பாக செய்திட முடியும். ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவு வகைகள் முக்கியமாக இருப்பினும், தினந்தோறும் எந்தெந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பதை சரியாக கடைபிடித்தாலே போதுமானது. அதையடுத்து, நமது உடலுக்கான கால அட்டவணையை முறையாக பின்பற்றினால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமும் இல்லை. மருந்து சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லை.
உடல் ஆரோக்கியத்தை தரும் உடலுக்கான கால அட்டவணை
- விடியற்காலை 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரலுக்கான நேரமாகும். இந்த நேரத்தில் மூச்சு பயிற்சியும், தியான பயிற்சியும் செய்தால் நீண்ட ஆயுளுடன் வளமாக வாழலாம்.
- காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடலுக்கான நேரமாகும். இந்த நேரத்தில் காலை கடன்களை முடிக்கும்போது மலச்சிக்கல் என்பதே வராது.
- காலை 7 மணி முதல் 9 மணி வரை வயிற்றுக்கான நேரம். இந்த நேரத்திற்குள் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.
- காலை 9 மணி முதல் 11 மணி வரை மண்ணீரலுக்கான நேரமாகும். இந்த நேரத்தில் நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகும். அந்த நேரத்தில் எதையும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் கூட குடிக்கக்கூடாது.
- காலை 11 மணி முதல் 1 மணி வரை இதயத்தின் நேரமாகும். இந்த நேரத்தில் இதய நோயாளிகள் சத்தமாக பேசுதல், கோபப்படுதல், படபடப்பாக இருத்தல் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.
- பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை சிறு குடலுக்கான நேரம். இந்த நேரம் மிதமாக உணவு சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வெடுப்பது நல்லது.
- பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை சிறுநீர் பையின் நேரம். இந்நேரத்தில் நீர்கழிவுகளை வெளியேற்றுவது சிறந்தது.
- மாலை 5 மணி முதல் 7 மணி வரை சிறுநீரகங்களுக்கான நேரம். இந்த நேரத்தில் தியானம், இறைவழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.
- இரவு 7 மணி முதல் 9 மணி வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தை சுற்றியிருக்கும் ஒரு ஜவ்வாகும். இந்த நேரத்தில் இரவு சிற்றுண்டி சாப்பிடுவது நல்லது.
- இரவு 9 மணி முதல் 11 மணி வரை உச்சந்தலை முதல் அடிவயிறு வரைக்கான நேரம். இந்நேரத்தில் அமைதியாக உறங்குவது நல்லது.
- இரவு 11 மணி முதல் 1 மணி வரை பித்தப்பைக்கான நேரம். இந்த நேரத்தில், அவசியம் உறங்க வேண்டும்.
- இரவு 1 மணி முதல் 3 மணி வரை கல்லீரலுக்கான நேரம். இந்த நேரம் ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரமாகும். இந்த நேரத்தில் கட்டாயம் தூங்க வேண்டும்.
இந்த கால அட்டவணையை இப்போதிருந்து பின்பற்ற தொடங்கினால் கூட 100 ஆண்டுகள் வரை எந்த நோய், நொடியின்றி ஆரோக்கியமாக வாழமுடியும்.