சைனீஸ் கார்லிக் சிக்கன்
தேவையான பொருட்கள்
1. சிக்கன் – ½ கிலோ ( எலும்பில்லாதது )
2. மைதா – 3 ஸ்பூன்
3. சோள மாவு – 3 ஸ்பூன்
4. உப்பு – தேவையான அளவு
5. மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
6. சோயா சாஸ் – 1 ஸ்பூன்
7. இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
8. தண்ணீர் – தேவையான அளவு
9. எண்ணெய் – தேவையான அளவு
கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
1. எண்ணெய் – சிறிதளவு
2. வெண்ணெய் – 1 ஸ்பூன்
3. இஞ்சி – 1 துண்டு ( பொடியாக நறுக்கியது )
4. பூண்டு – 20 பல் ( பொடியாக நறுக்கியது )
5. வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
6. தக்காளி சாஸ் – 1 ஸ்பூன்
7. சோயா சாஸ் – 1 ஸ்பூன்
8. சில்லி சாஸ் – 1 ஸ்பூன்
9. வினிகர் – ½ ஸ்பூன்
10. உப்பு – தேவையான அளவு
11. சர்க்கரை – 1 ஸ்பூன்
12. மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
13. சோள மாவு – 1 ஸ்பூன்
14. வெங்காயத் தாள் – சிறிதளவு
15. தண்ணீர் – தேவையான அளவு
- முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த சிக்கனை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
- சிக்கனுடன் மைதா, சோள மாவு, மிளகு தூள், சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். - எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். - வெண்ணெய் உருகியதும் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- இஞ்சி பூண்டு வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், வினிகர், 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் சோள மாவினை சேர்த்துக் கொள்ளவும்.
- அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் எதுவும் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- கலந்த சோள மாவு கலவையை வாணலியில் சேர்த்துக் கொள்ளவும்.
- சோள மாவு சேர்த்து கைவிடாமல் கலந்து விடவும்.
- பின்னர் பொறித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடத்திற்கு மூடி பொட்டு வேக விடவும்.
- கடைசியாக பொடியாக நறுக்கிய வேங்கயத்தாளினை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சைனீஸ் கார்லிக் சிக்கன் ரெடி.