சிக்கன் ரோல்
சிக்கனை பயன்படுத்தி ஒரு அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி சிக்கன் ரோல் சுலபமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் – ¼ கிலோ
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- ஜீரகத் தூள் – ½ ஸ்பூன்
- தனியா தூள் – 1 ஸ்பூன்
- தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- சாட் மசாலா – ¼ ஸ்பூன்
- மிளகு தூள் – ½ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- கொத்தமல்லி சட்னி – ¼ கப்
- மைதா – 150 கிராம்
செய்முறை
- முதலில் சிக்கனில் உள்ள எலும்புகளை நீக்கி விட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- சுத்தம் செய்த சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- சிக்கனுடன் சிறிதளவு உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.
- பின்னர் 150 gram மைதாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும்.
- அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு 10 நிமிடத்திற்கு ஊற விடவும்.
- 10 நிமிடத்திற்கு பிறகு மாவை சப்பாத்தியாக தேய்த்து சுட்டு வைத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு வதக்கவும்.
- சிக்கன் கொஞ்சம் வதங்கியவுடன் அதில் சீரகத் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள், சாட் மசாலா ஆகிய எல்லாவற்றையும் போட்டு பிரட்டி விட்டு நன்கு வேக விடவும்.
- சிக்கன் நன்கு வெந்ததும் சிறிதளவு மிளகு தூள் கொஞ்சம் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி வைக்கவும்.
- அதன் பிறகு செய்து வைத்திருக்கும் சப்பாத்தியின் மேல் கொத்தமல்லி சட்னியை தடவி விடவும்.
- கொத்தமல்லி சட்னிக்கு பதில் தக்காளி சாஸ் கூட பயன்படுத்தாலம்.
- சட்னி தடவிய பின் அதில் வதக்கி வைத்திருக்கும் சிக்கனை வைத்து சப்பாத்தியை அப்படியே ரோலாக சுருட்டவும். சுவையான சிக்கன் ரோல் ரெடி.