சிக்கன் சுக்கா வறுவல்
சிக்கனின் சுவையே அலாதிதான். அதிலும் சிக்கனை விதவிதமாக செய்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்கள் சிக்கன் பிரியர்கள். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது காரசாரமான சிக்கன் சுக்கா வறுவல், வாருங்கள் சிக்கன் சுக்கா வறுவலை எப்படி செய்வது என்று பார்ப்போம்,
தேவையான பொருட்கள் :
1. சிக்கன் – ½ கிலோ
2. சின்ன வெங்காயம் – 15
3. பூண்டு பல் – 10
4. தக்காளி – 2
5. மிளகாய் தூள் – 2 Tbs
6. மல்லித்தூள் – 1 Tbs
7. சீரகம் – ½ Tbs
8. சோம்பு – ½ Tbs
9. மஞ்சள் தூள் – ½ Tbs
10. மிளகுத்தூள் – 1 Tbs
தாளிக்க தேவையான பொருட்கள்
1. எண்ணெய் – தேவையான அளவு
2. சோம்பு – ½ Tbs
3. பட்டை – 3 துண்டு
4. லவங்கம் – 3
5. அன்னாசிப்பூ – 1
6. வெந்தயம் – ½ Tbs
7. கறிவேப்பிலை – தேவையான அளவு
8. உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. பாதி வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பின்பு தக்காளியையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
3. சீரகம், சோம்பு, மஞ்சள் தூள், பூண்டு பற்கள், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அம்மி அல்லது மிக்சியில் பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.
4. அதன் பிறகு அரைத்த பேஸ்ட்டை வெட்டி வைத்த சிக்கனில் நன்றாக கலந்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
5. வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு, வெந்தயம் போன்ற மசாலா பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும்.
6. பின்பு மீதமுள்ள வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கி, அதனுடன் ஊறவைத்த சிக்கனை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
7. இவற்றை 10 நிமிடம் மிதமான தீயில் வதக்கி பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.
8. சிக்கன் வெந்து தண்ணீர் வாணலியில் வற்றியவுடன் மிளகுத்தூள் சேர்த்து மேலும் 10 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும்.
9. அதன் பிறகு கறி வெந்தவுடன் கொதமல்லி இழை தூவி இறக்கி விடவும். சுவையான சிக்கன் சுக்கா வறுவல் ரெடி.