செட்டிநாடு பால் பணியாரம்
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 1 கப்
- உளுந்து – 1 கப்
- தேங்காய் துருவல் – 2 கப்
- ஏலக்காய் – தேவையான அளவு
- சர்க்கரை – 1 கப்
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
- பால் பணியாரம் செய்வதற்கு முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் உளுந்து மற்றும் 1 கப் பச்சரிசியை ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 3 மணி நேரம் ஊறிய பின் உளுந்து மற்றும் அரிசியினை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
- நன்கு நைசான பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அரைத்த மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் பால் எடுக்க ஒரு முழு தேங்காயினை துருவி மிக்சியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி முதல் மற்றும் இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்.
- தேங்காய் பாலில் 1 கப் சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கலந்து வைத்துள்ள மாவினை ஒரு ஸ்பூனில் எடுத்து எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
- பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து நிறம் மாறாமல் பொறித்து எடுக்கவும்.
- பொறித்த பணியாரத்தை தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பாலில் சேர்க்கவும்.
- தேங்காய் பாலில் சேர்த்து 2 மணி ஊறிய பின் எடுத்து பரிமாறினால் சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி.