சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

மீன் குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருட்கள்

  1. மீன் – ½  கிலோ
  2. புளி – எலுமிச்சை அளவு
  3. பூண்டு – 10 பல்
  4. சின்ன வெங்காயம் – 10
  5. தக்காளி – 1
  6. மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
  8. மல்லித்தூள் – 2 ஸ்பூன்
  9. உப்பு – தேவையான அளவு
  10. கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி

அரைக்க

  1. தேங்காய் துருவல் – ¼  கப்
  2. மிளகு – 1 ஸ்பூன்
  3. சீரகம் – 1 ஸ்பூன்
  4. கருவேப்பிலை – 2 கொத்து

தாளிக்க

  1. சீரகம் – ½  தேக்கரண்டி
  2. கடுகு – ½ ஸ்பூன்
  3. மிளகு – ½  தேக்கரண்டி
  4. வெந்தயம் – 1 ஸ்பூன்
  5. கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
  6. நல்லெண்ணெய் –  தேவையான அளவு

செய்முறை

  1. புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  4. மீனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  5. கடாயில் என்னை ஊற்றி கடுகு,சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  6. பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
  7. பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  8. நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.
  9. வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.
  10. கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து பின் பரிமாறினால் சுவையான மீன் குழம்பு தயார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மிதுன லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள், மற்றும் அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்களை செய்வார்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவராகவும், கணக்கில் ஆர்வம் மிக்கவராகவும்...
அழகான பாதங்கள்

உங்கள் பாதங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.

பாதங்கள் நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதங்களின் அழகும் முக்கியம் தான். ஆனால் பெண்கள் தங்கள் முகம், தலைமுடி,...
chickken chappathi roll

சிக்கன் ரோல் செய்வது எப்படி

சிக்கன் ரோல் சிக்கனை பயன்படுத்தி ஒரு அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி சிக்கன் ரோல் சுலபமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் – ¼  கிலோ இஞ்சி பூண்டு விழுது...
பழங்கள்

கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

கருவுற்றிருக்கும் பெண்களின் உணவு முறைகள்  ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கருவுறுதலை வேகமாக்கும். ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவுகள் பெண்களின் கருமுட்டையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கருவுருதலுக்கு ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இளந்தம்பதியர்...
மச்ச சாஸ்திர பலன்கள்

நவகிரக மச்சம் என்றால் என்ன? அவற்றின் பலன்கள் யாவை?

நவகிரக மச்சம் சிலருக்கு பிறக்கும்போதே உடலில் நவகிரக மச்சங்கள் இருக்கும். நவகிரக மச்சம் என்பது சூரியன் போன்ற வடிவிலோ, சந்திர வடிவிலே, இன்னும் சில விசேஷ நவகிரக குறியீடுகள் போலவே, உருவத்திலோ, வடிவத்திலோ, நிறத்திலோ,...
பிரதமை திதி பலன்கள்

பிரதமை திதி பலன்கள், பிரதமை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

பிரதமை திதி அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் திதி பிரதமை திதியாகும். பிரதமை என்பது வடமொழி சொல்லாகும். இதற்கு முதலாவது என்று பொருள். அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் எவை? யோகங்கள் பகுதி # 3

ஜாதக யோகங்கள் யோகங்கள் என்பது நமது ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். இந்த கிரக இணைப்புகள் அமைந்துள்ள இடத்தை பொருத்து நற்பலன்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.