மூளை மிளகு வறுவல் செய்வது எப்படி?

மூளை மிளகு வறுவல்

மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது. மட்டன் மூளை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும். அந்தவகையில் மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு செய்வதை என்பதை பார்ப்போம்.

மூளை வறுவல்

தேவையான பொருட்கள்

1. ஆட்டு மூளை – 2
2. மஞ்சள் தூள் – ¼ மேஜைக்கரண்டி
3. உப்பு – தேவையான அளவு
4. இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜைக்கரண்டி

5. வெங்காயம் – 2

அரைக்க தேவையான பொருட்கள்

  1. மிளகு – 10
  2. சீரகம் – ½ மேஜைக்கரண்டி
  3. பட்டை – 2 துண்டு
  4. கிராம்பு – 3
  5. ஏலக்காய் – 3
  6. சோம்பு – ¼ மேஜைக்கரண்டி
  7. முழு தனியா – 1 மேஜைக்கரண்டி

தாளிக்க தேவையான பொருட்கள்

  1. எண்ணெய் – தேவையான அளவு
  2. கடுகு – 1 மேஜைக்கரண்டி
  3. டால்டா – தேவையான அளவு
  4. கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு

செய்முறை

1. மூளையை நன்றாக கழுவி கொள்ளவும். மூளையின் மேலே உள்ள மெல்லிய தோலை வெட்டி விட கூடாது.

2. மூளையுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.

3. பொடி செய்ய வேண்டிய பொருட்களை வெறும் வணலியில் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

4. ஒரு இரும்பு வாணலியில் எண்ணெய், டால்டா இரண்டையும் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

  1. அதனுடன் அரைத்த மசாலா பொடி முழுவதும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும்.
  2. அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
  3. பின்பு அதனுடன் வேக வைத்த மூளையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
  4. தண்ணீர் முழுவதும் சுண்டியதும் அதை சிறு துண்டுகளாக போட்டு நல்ல முறுகலாக வறுத்தெடுத்து அதன் மேல் மிளகு பொடியை தூவி விடவும்.
  5. பின்பு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மூளை மிளகு வறுவல் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பெண் ருதுவாகும் பலன்

பெண் எந்தெந்த நக்ஷத்திரத்தில் ருது வானால் என்ன பலன்

பெண் எந்தெந்த நக்ஷத்திரத்தில் ருது வானால் என்ன பலன் பெண் ருதுவாதல் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த நிகழ்வை ருதுவாதல், பருவமடைதல், புஷ்பவதி ஆதல், பெரிய பிள்ளை ஆதல், பூப்படைதல் என பல...
2ம் எண்ணின் குணநலன்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 2ம் எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 2ம் எண்ணில்...
திருமணத்தில் மாலை மாற்றுதல்

திருமணத்தில் மாலை மாற்றுதல் சடங்கு ஏன் செய்யபடுகிறது?

திருமணத்தில் மாலை மாற்றுதல் ஒரு திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எண்ணற்ற சடங்குகள் நம் சமுகத்தில் செய்கின்றனர். ஆனால் பல சடங்குகள் ஏன் செய்கின்றனர் என பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று...
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பரணி நட்சத்திரத்தின் இராசி : மேஷம் பரணி நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பரணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை – துர்க்கை பரணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
சுவையான மீன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு மீன் குழம்பு பிடிக்காதவர்களே இருக்க முடியாது. மீன் குழம்பு என்றாலே காரமானதாகத்தான் இருக்கும். அதிலும் ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு என்றால் நல்ல சுவையாக காரசாரமாக இருக்கும். வாங்க...
sinus remedies

சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள், மற்றும் அதற்கான தீர்வுகள்

சைனஸ் பாதிப்பிற்கான தீர்வுகள் சைனஸ் என்றால் என்ன ? சைனஸ் என்பது மூக்கின் இரு பக்கங்களிலும் சளி நிறைந்து இருப்பதே ஆகும். இது ஒரு விதமான ஒவ்வாமையாகும். அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி...
மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.