பாதாம் அல்வா
தேவையான பொருள்கள்
- பாதாம் பருப்பு – 1 கப்
- சர்க்கரை – ¾ கப்
- நெய் – ¼ கப்
- தண்ணீர் – சிரிதளவு
செய்முறை
- பாதாம் பருப்பை வெந்நீரில் இரண்டு மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
- நன்கு ஊறிய பின்னர் பாதாம் பருப்பின் தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும்.
- உரித்த பாதாம் பருப்பை ஒரு மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- அடிகனமான ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் பாத்திரமாக இருந்தால் மிகவும் சிறந்தது. அல்வா நன்கு ஒட்டாமல் வரும்.
- பாத்திரம் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு அரைத்து வைத்துள்ள பாதாம் விழுதை சேர்க்கவும்.
- எடுத்து வைத்துள்ள நெய்யில் பாதி மற்றும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.
- நன்கு கைவிடாமல் கலந்து விடவும்.
- சர்க்கரை நன்கு கரைந்த பின் மீதமுள்ள நெய்யை சேர்க்கவும்.
- நெய் பிரிந்து வெளியே வரும் அதுவரை நன்கு கைவிடாமல் கிளறிவிடவும்.
- தேவைபட்டால் கேசரி கலர் அல்லது குங்குமப் பூவை பாலில் சேர்த்து கலந்து பின் சேர்த்துக் கொள்ளலாம்.
- வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- கடைசியாக பொடியாக நறுக்கிய பாதாம் சிறிதளவு சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான பாதாம் அல்வா தயார்.