நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ்

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ்

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ்நமது வாழ்வியல் மாற்றங்களும் முடி நரைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. முடி நரைப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும்.

உணவு பழக்க வழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டுவருவதின் மூலமும் நரை முடியை சரி செய்யலாம். விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் நிரந்த உணவுகள் , பழங்கள் , கீரைகள் சாப்பிடுவதின் மூலமும் நரை முடி வருவதை தடுக்கலாம்.

நரை முடி வராமல் தடுக்க நரை முடியை சரி செய்ய சில குறிப்புகள்

  1. சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் இளநரை மாறும். அதேபோல், முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
  2. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம்.
  3. கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.
  4. கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயப் பொடி, இஞ்சி, தேன் ஆகியவற்றை தினமும் ஒவ்வொன்றாக உணவில் சேர்த்து வரலாம்.
  5. சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் இளநரை மாறும். அதேபோல், முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
  6. ஷாம்பூவை பயன்படுத்தாமல் சிகைக்காயை பயன்படுத்துவது மிகவும் சிறந்ததாகும். இதில் உள்ள இயற்கை பொருட்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாத்து நரைமுடி வராமல் தடுக்கிறது.
  7. மருதாணி இலை,வேப்பங்கொழுந்து, நெல்லிக்காய் மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்துக் கொள்ளவும். இரவு நேரத்தில் முடியின் வேர்கால்களில் படும்படி நன்கு தேய்த்து மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நரை முடி மறைந்து நன்கு கரு கருவென மாறிவிடும்.
  8. நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.
  9. இஞ்சியை பால் சேர்த்து அரைத்து, அதை நரை முடி இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற விட்டு சிகைக்காய் போட்டு தலைக்கு குளித்து வர நரை முடி நீங்கும்.
  10. மிளகை தூளாக்கி அதை தயிரில் கலந்து தலைக்கு தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டு, பின் சிகைக்காய் போட்டு குளித்தால் நரை முடி கருப்பாக மாறும்.
  11. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி கூந்தலின் வேர்களை வலுவாக்குகிறது. நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதைக் கொதிக்க வைத்து, வாரத்திற்கு இருமுறை முடிகளில் தடவி வந்தால், நரைமுடிகள் மறைந்து விடும்.
  12. நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால் கூந்தலுக்கு மிகவும் நல்லது.
  13. தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து முடிக்கு தடவி வந்தால் தலைமுடியில் சில மாற்றங்கள் ஏற்பட்டு நரை முடி கருமை நிறத்தில் மாறிவிடும்.
  14. அவுரிப் பொடி, மருதாணி இலையுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவி வந்தால் நாளடைவில் தலை முடி நன்கு கருமை நிறமாக மாறி விடும்.
  15. வாரத்தில் ஒருமுறை நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்து லேசாக சூடு செய்து, தலை முடியில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் கைகளால் மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து நன்றாக சிகைக்காய் கொண்டு தலைமுடியை அலசுங்கள்.
  16. இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நரைமுடி மறைந்து கருமையான தலை முடியை பெற முடியும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...
watermelon payasam

உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம் தேவையான பொருட்கள் தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது ) நெய் – தேவையான அளவு முந்திரி, திராட்சை – தேவையான அளவு சர்க்கரை –...
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சுவாதி நட்சத்திரத்தின் இராசி : துலாம் சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி : ராகு சுவாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : வாயு பகவான் சுவாதி நட்சத்திரத்தின்...
பெண்கள் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி  சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒரு வீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த குடும்பத்தில் உள்ள...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கும்ப லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் சற்று உயரமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல கவர்ச்சியான, மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். தெய்வ பக்தியும்,...
பப்பாளி பழ அல்வா செய்வது எப்படி

பப்பாளி பழ அல்வா செய்முறை

பப்பாளி பழ அல்வா தேவையானப் பொருட்கள்: பப்பாளி பழ துண்டுகள்  -  2 கப் சர்க்கரை  -  1 கப் சோள மாவு - 2 ஸ்பூன் நெய்  -  4 தேவையான...
நவகிரக தோஷம் விலக

நவகிரக தோஷம் என்றால் என்ன? நவகிரக தோஷத்திற்கான பரிகாரங்கள்

நவகிரக தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தாலும் கூட, வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்தித்தே தீருவார். கிரக நிலைகள் நன்றாக இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால்,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.