இராசிக்கல்
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உண்டு. ஒவ்வொரு அதிபதிக்கும் ஒவ்வொரு ராசிக்கல் உண்டு. ராசிக்கல் அணிவதால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியும் அடைய முடியும் என்பது உண்மையல்ல. ராசிக்கல் அணிந்ததால் மட்டுமே அனைத்தும் கிடைத்துவிடாது.
நமக்கு கிடைக்கவிருக்கும் அதிர்ஷ்டத்தை பக்கத்தில் கொண்டு வரும் ஒரு கருவியாக மட்டுமே ராசிக்கல் செயல்படும். ராசிக்கல் அணிந்தால் ஒரு 10 சதவீதம் அளவிற்கு நன்மைகள் கிடைக்கும்.
நம் கைவிரல்களில் அணியும் ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து, கல்வி, தொழில்,திருமண வாழ்க்கை போன்ற அனைத்திலும் முன்னேற நமக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி, நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
இராசிக்கல் அணிவதால் கிரகங்களினால் ஏற்படும் எதிர்மறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அவரவர் ராசிக்கும் கிரகங்களுக்கும் ஏற்றவாறு ராசிக்கல் அணிந்தால் தீய சக்தியின் தாக்கங்கள் நம்மை நெருங்காமல் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.
ராசிக்கல் என்று சொல்லகூடிய நவரத்தின கற்களுக்கு கிரகக்கோளாருகளை சரி செய்யக் கூடிய சக்தி இருக்கிறது. அதனால் தான் கோயில்களில் சுவாமி உருவம் பிரதிஷ்டை செய்யப்படும்போது அதன் அடியில் நவரத்தின கற்களை போட்டு அஷ்டபந்தனம் செய்து அதன் சக்தியை நிலைநிறுத்துகின்றனர்.
அதேபோல் இராசிக்கல்லின் மகத்துவம் குறித்து பண்டைய சங்ககால நூல்களிலும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலத்தில் அரசர்களும், பெரும் செல்வந்தர்களும் தங்கள் கிரீடம், ஆடை ஆபரணங்களிலும் குறிப்பாக மோதிரத்திலும் இராசிக்கல் என்று சொல்லகூடிய நவரத்தினங்களை பதித்து அணிந்ததை நாம் அறியலாம்.
எந்த கிரகத்திற்கு எந்த இராசிக்கல் சிறந்தது
- சூரியன்- மாணிக்கம்
- சந்திரன்- முத்து
- செவ்வாய்- பவழம்
- புதன்- மரகதம்
- குரு- புஷ்பராகம்
- சுக்கிரன்- வைரம்
- சனி- நீலம்
- ராகு- கோமேதகம்
- கேது- வைடூரியம்
இராசிக்கல் எப்படி தேர்வு செய்ய வேண்டும்
- பிறந்த மாதம்
- பிறந்த தேதி
- பிறந்த இலக்கினம்
- பிறந்த இராசி அதிபதி
- பிறந்த நட்சத்திர அதிபதி
- நடைபெறும் மகாதிசை அதிபதி
- இராசிக்கட்டத்தில் வலு அதிகமான கிரகம்
- இராசிக்கட்டத்தில் வலு குறைந்த கிரகம்
இராசிக்கல் அணிவதால் உண்டாகும் பலன்கள்
இராசிக்கல் மோதிரம் அணியும் பலரும், தங்களது இராசிக்கேற்ற கல்லை வாங்கி மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்கின்றனர்.
இராசிக்குரிய இரத்தினத்தை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வதில் தவறில்லை. அதனால் எந்தவிதமான கெடுதலும் ஏற்படாது.
இராசிக்கற்களை வாங்கும்போது, நல்ல உண்மையான ராசிக்கற்கள் தானா என்று தரம் பார்த்து வாங்க வேண்டும். போலியான ராசிக்கற்களாக இருந்தால் அதை அணிவதால் எந்த பலனும் கிடைக்காது.
நவரத்தின கற்களை நல்ல அனுபவமும், நம்பிக்கையும் வாய்ந்த நபர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் அல்லது பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாங்குவது நல்லது.