ஏலக்காய் தண்ணீர் பயன்கள்
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த ஒரு அறிய மருந்து தான் ஏலக்காய். ஏலக்காய் நம் அனைவரின் வீட்டிலும் இருக்கக் கூடிய ஒரு அறிய மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும். ஏலக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும் அதனை நாம் பயன்படுத்தலாம்.
ஏலக்காயில் புரதம்,மாவுச்சத்து, நார்ச்சத்து,கால்சியம்,உட்பட பல்வேறு முக்கியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. சித்தமருத்துவத்தில் ஏலக்காய் மிகப்பெரிய பங்காற்றுகிறது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஏலக்காய் தண்ணீரை குடிப்பதினால் என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.
செரிமானம்
ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால் உணவு விரைவாக செரிமானம் அடையும். வயிறு உப்புசமாக தோன்றுவது, வயிற்று வலி, நெஞ்செரிச்சல்,குமட்டல், ஆகிய வயிறு தொடர்பான பிரச்சனைகள் சரியாகிவிடும். இந்த நீரை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
நச்சுக்கள்
நம் உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான நச்சுக்கள் தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அவ்வப்போது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏலக்காய் நீர் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.
வாய்துர்நாற்றம்
ஏலக்காய் இயற்கையாகவே அதிக வாசனையுடையது. வாய்துர்நாற்றம் உள்ளவர்கள், பற்களில், ஈறுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாக்டீரியா தொற்று மற்றும் வாய்ப்புண் உள்ளவர்கள் ஏலக்காய் தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்தி வர இவை அனைத்தும் சரியாகிவிடும். வாய் புத்துணர்ச்சியாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
ஆரோக்கியமான வாழ்விற்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் அவசியமாகும். ஏலக்காய் நீர் குடிப்பதினால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். தொண்டைப் பிரச்சனைகள், வைரஸ் காய்ச்சல் ஆகியவை குணமாகும். காய்ச்சல் தலைவலி ஏற்பட்டு இரண்டு நாட்கள் கழித்து இந்த நீரை குடிப்பதினால் எந்த பயனும் இல்லை. மாறாக ஆரம்ப கட்டத்திலேயே குடிக்க வேண்டியது அவசியமாகும்.
முதுமை தோற்றம்
ஏலாக்காயில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கின்றன. இது நம் உடலில் இருக்கும் செல்களின் உற்பத்திக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. இதனால் சருமம் பளபளப்புடன் ஆரோக்கியத்துடனும் இருப்பது மட்டுமல்லாமல் இளமையுடன் இருக்க இது உதவிடும்.
மூச்சுப் பிரச்சனை
சுற்றுப்புறச் சூழல் காரணமாக அடிக்கடி மூச்சுத் திணறல் அல்லது மூச்சு விட சிரமம் ஏற்பட்டால் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த நீரை காய்ச்சி குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இரத்த சோகை
இன்று பலருக்கும் இருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று சோகை. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் அதிகப்படியான இரத்த போக்கின் காரணமாக இரத்த சோகை ஏற்படுத்திறது. இவ்வகையான பாதிப்பு உள்ளவர்கள் ஏலக்காய் நீர் குடிப்பதினால் அதன் தீவிரத்தை கட்டுபடுத்த முடியும்.
தொடர் இருமல்
சிலருக்கு அதிக சூடு காரணமாகவோ அல்லது பருவநிலை மாற்றம் காரணமாகவோ தொடர் இருமல் ஏற்பட்டிருக்கும். இந்த நீரை குடித்தால் உடனடி பலன் கிடைக்கும். இருமலை கட்டுப்படுத்துவதுடன், உடல் சோர்வையும் தடுக்கும்.
சரும பளபளப்பு
தொடர்ந்து ஏலக்காய் தண்ணீரை குடித்து வந்தால் சருமம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சருமத்திற்கு சருமத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கிறது.
கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும்
ஏலக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடலில் இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.