ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
ஆயில்யம் நட்சத்திரத்தின் இராசி : கடகம்
ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி : புதன்
ஆயில்யம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன்
ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிதேவதை : ஆதிசேஷன்
ஆயில்யம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : பெருமாள்
ஆயில்யம் நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் : ராட்சஸகணம்
ஆயில்யம் நட்சத்திரத்தின் விருட்சம் : புன்னைமரம்
ஆயில்யம் நட்சத்திரத்தின் மிருகம் : ஆண் பூனை
ஆயில்யம் நட்சத்திரத்தின் பட்சி : கிச்சிலி
ஆயில்யம் நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்
ஆயில்யம் நட்சத்திரத்தின் வடிவம்
ஆயில்யம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 9ம் இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘கட்செவி’ என்ற பெயரும் உண்டு. ஆயில்யம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் சர்ப்பம் மற்றும் அம்மிக்கல் போன்ற வடிவங்களில் காணப்படும்.
ஆயில்யம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொன், பொருள் சேர்க்கையில் விருப்பம் கொண்டவர்கள். எடுத்த கொண்ட செயலை நிறைவாக முடிக்கும் திறமை கொண்டவர்கள். பிறரை கட்டுபடுத்துவதில் விருப்பம் கொண்டவர்கள். தங்கள் வாழ்கையை தாங்கள் எண்ணிய விதம் வாழ்வார்கள். பெற்றோர்கள் மீது விருப்பம் கொண்டவர்கள். கடுமையான சொற்களை பேசக்கூடியவர்கள். எப்போதும் முதலிடத்தில் இருப்பதையே விருப்புவதால் பொது ஜன தொடர்புடைய துறைகளில் இறங்கினால் பிரகாசிக்கலாம். இவர்கள் 33 வயதுக்குப் பின்னர் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள்.
ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன். நட்சத்திராதிபதி புதன் என்பதால் இவர்களுக்கு இயற்கையாகவே நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும், சகல வித வித்தைகளையும் அறிந்து கொள்ள கூடிய ஆர்வமும் இருக்கும். மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். வாழ்வில் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள். சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள். மன வலிமையையும், உடல் வலிமையும் ஒருங்கே பெற்றவர்கள். எதிரிகளை கண்டு அஞ்சமாட்டார்கள். இவர்களிடம் ஒரு வேலையை ஒப்படைத்தால் அதை முடிக்கும் வரை ஓய மாட்டார்கள்.
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இருவேறு குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். ஒருசமயம் நல்லவர்களாக இருக்கும் இவர்கள், மற்றொரு சமயம் முரட்டுத்தனமும், முன்கோபமும், எடுத்தெரிந்து பேசும் குணமும் இருக்கும். பொதுவாக இவர்கள் இந்த குணம் பெற்றவர்கள் இல்லை. இவர்கள் பேச்சு மற்றும் நடந்து கொள்ளும் முறையில் மற்றவர்களுக்கு இவர்கள் மேல் உள்ள அபிப்ராயம் மாறிவிடும். பிறரை ஏளனம் செய்து அதில் இன்பம் காணும் இயல்பு கொண்டவர்கள். திட்டமிட்டு செலவு செய்வதில் வல்லவர்கள்.
இவர்களுக்கு இயற்கையாகவே எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ள கூடிய துணிவு இருக்கும். தனக்கு சரியென பட்டால் மட்டுமே மற்றவர்களின் ஆலோசனைகளை ஏற்பார்கள். இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேரிப்பவர்கள். இவர்களுக்கு பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை செய்ய கூடிய ஆற்றல் கொண்டவர்கள். சற்று சோம்பல் குணம் இருக்கும். தர்ம நியாயத்தை கடைப்பிடிப்பவர்கள்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே கெட்டிக்காரர்கள், சாமர்த்தியசாலிகள். ஏழை பணக்காரன், நல்லவன், கெட்டவன் பாகுபாடில்லாமல் அனைவருடனும் சமமாக பழகும் தன்மை கொண்டவர்கள். இவர்கள் பலவீனமே தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதை விட, தேவைப்படாதவர்களுக்கு உதவி செய்வார்கள். பெரும்பாலும் இவர்களுக்கு எதிரியாக மாறுவது உற்ற உறவுகளே. கடைசியில் இவர்களை காப்பாற்றுவது இவர்களுக்கு கொஞ்சமும் அறிமுகம் இல்லாதவர்களே.
ஆயில்யம் நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் ஆயில்ய நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். வீரம் உடையவர்கள். சாமர்த்தியசாலிகள். ஆராய்ச்சி பணிகளில் விருப்பம் கொண்டவர்கள். கீர்த்தியை விரும்புபவர்கள். மிகுந்த வாக்கு பலிதம் உள்ளவர்கள். மிகுந்த சொல்வன்மை உள்ளவர். நல்ல அறிவுடையவர், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் உடையவர், பலவிதமான செயல்களைச் செய்பவர். இவர்கள் புகழ்ச்சியை அதிகம் விரும்புவார்கள்.
ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் ஆயில்ய நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். சுகபோக வாழ்க்கை வாழ ஆசைப்படுபவர்கள். விரும்பிய வாழ்க்கையை அடைய எதையும் செய்யக்கூடியவர்கள். தவறுகளையும் நியாயப்படுத்துவார்கள். முன் கோபம் கொண்டவர்கள். இவர்கள் தவறே செய்தாலும் அதை நியாயபடுத்தி பேசுவார்கள். இவர்கள் சுகமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
ஆயில்யம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் ஆயில்ய நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். தீய சொற்களை பேசக்கூடியவர்கள். தன்னைத் தானே கெடுத்துக் கொள்ளக்கூடியவர்கள். மெதுவான போக்கை கொண்டவர்கள். கர்வம் மற்றும் கோபம் கொண்டவர்கள். இவர்கள் காரணமே இல்லாமல் அடிக்கடி கோபப்படுவார்கள். கோபம் இவர்களின் சுபாவமாக இருக்கும். எல்லா செயல்களையும் அராய்ந்து பார்க்கும் குணம் இருக்கும். தான் சொல்வதே சரி என வாதம் செய்வார்கள்.
ஆயில்யம் நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் ஆயில்ய நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். அசட்டுதனமான நம்பிக்கை கொண்டவர்கள். சொத்துகளை அழிப்பவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள். இவர்கள் அறிவாளிகள். சோம்பலான போக்கை கொண்டவர்கள். நோய் உடையவர்கள். இவர்கள் கஷ்டப்பட்டு உழைப்பதில் விருப்பம் இல்லாதவர்கள். புத்திசாலிகள். எல்லா விஷயங்களையும் எதிர்மறை கண்ணோட்டதுடனே அணுகுவார்கள். எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்ய மாட்டார்கள்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.