நாட்டுக் கோழி குழம்பு
நாட்டு கோழி குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. அது உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு கோழி குழம்பை எவ்வாறு எளிதாக செய்யலாம் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நாட்டுக் கோழி – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 10 No’s
தக்காளி – 4 No’s
எண்ணெய் – 50 ml
தேங்காய் பால் – 1 கப்
மல்லி தூள் – 3 Tbs
சோம்பு – 1 Tbs
மஞ்சள் தூள் – 1 Tbs
கரம் மசாலா – 1 Tbs
மிளகாய் தூள் – 1 Tbs
பச்சை மிளகாய் – 2 No’s
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
2. வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் பாதி அளவு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
4. இவற்றை வதக்கிய பின்பு அவற்றை ஆறவைத்து மிக்ஸிசியில் மையாக அரைத்து கொள்ளவும்.
5. பின்பு சுத்தம் செய்த நாட்டுக்கோழியை சிறிய துண்துகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
6. குக்கரில் தேவையான் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பின்பு மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
7. மேற்கூறிய பொருட்கள் நன்கு வதங்கிய பின் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்த நாட்டு கோழியை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். குக்கரை சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைத்து கொள்ள வேண்டும்.
8. 5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதனுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு மூடவும்.
9. நாட்டு கோழி வேக சிறிது நேரம் ஆகும் என்பதால் 5 விசில் வரும் வரை அதை வேக விடவும், அப்பொழுதுதான் கறி நன்றாக வெந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
10. 5 விசில் இறங்கின பிறகு குக்கரை திறந்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும். காரசாரமான நாட்டுக்கோழி குழம்பு தயார்.