உளுந்தங்களி
உளுந்தங்களி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டிய நார்ச்சத்து அதிகம் உள்ள ஒரு சத்தான உணவாகும். இதில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கொழுப்பு, வைட்டமின் B போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்புகளை வலுவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரித்து கர்ப்பபையை வலுவடைய செய்கிறது.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து – 1 கப்
- பச்சரிசி – 1 கப்
- கருப்பட்டி – 2 கப்
- நல்லெண்ணெய் – ¼ கப்
- சுக்கு பொடி – ¼ ஸ்பூன்
- ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
- உப்பு – 1 சிட்டிகை
- தண்ணீர் – 3 கப்
செய்முறை
- கருப்பு உளுந்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கழுவி காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- உளுந்து காய்ந்தவுடன் அதனை ஒரு அடிகனமாக பத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதே பாத்திரத்தில் பச்சரசியையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- உளுந்து மற்றும் பச்சரிசி சூடு ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்து வைத்துள்ள மாவினை சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் இதில் 1 கப் மாவிற்கு 3 கப் வீதம் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டிகள் எதுவும் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
- மாவு நன்கு வெந்து வந்ததும், அதில் 1 சிட்டிகை உப்பு, கொஞ்சம் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின்னர் இதில் 2 கப் கருப்பட்டியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- கருப்பட்டி நன்கு கரைந்து அல்வா பதத்திற்கு வந்ததும் அதில் ¼ கப் நல்லெண்ணையை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சத்தான உளுந்தங்களி ரெடி.