திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?
உலகிலேயே இந்தியாவில் உள்ள மணமான பெண்கள் மட்டும் தான் மெட்டி அணியும் கலாச்சாரத்தை காலங்காலமாக வழக்கமாக வைத்துள்ளனர். மெட்டி அணிவது வெறும் திருமணம் ஆனதற்கான அடையாளம் மட்டுமல்ல, அதில் அறிவியலும் ஒளிந்திருக்கிறது. திருமணமான பெண்கள் நெற்றியின் உச்சி வகிட்டில் குங்குமம் வைத்தும், கால் விரலில் மெட்டியும் அணிகின்றனர். முந்தைய காலங்களில் திருமணமான ஆண்கள் தான் மெட்டியை அணிந்தனர். ஆனால் காலபோக்கில் இப்பழக்கம் பெண்களுக்கு மட்டுமே உரியதாக மாறி போனது.
முன்பு பெண்கள் தெருவில் நடந்து செல்லும்போது தலை குனிந்தபடி செல்வர். அப்போது எதிரே வரும் ஆண்களுக்கு, பெண்ணின் உச்சி நெற்றி நன்கு தெரியும். அதில், வகிட்டுப் பொட்டில் குங்குமம் இருந்தால் அவள் திருமணமானவள் என்பதை அறிந்து கொண்டு விலகிச் செல்வார்கள். அதே போல திருமணமான ஆண்கள் கால் விரலில் மெட்டி அணிந்து செல்லும் போது, பெண்கள் அவர்களின் மெட்டியை கண்டால், அவன் வேறு ஒருவளுக்கு உரியவன் என எண்ணி அவனை நிமிர்ந்து பார்க்காமல் விலகிச் செல்வாள். இவ்வாறு ஆணோ, அல்லது பெண்ணோ திருமணம் ஆனவர்களா என்பதை அடையாளம் காண்பதற்காக இவை அமைந்தன.
பெண்களின் கருப்பையில் உள்ள முக்கிய நரம்புகள் கால் விரல்களில் இருக்கிறது. திருமணமான பெண்கள் காலில் வெள்ளியால் ஆன மெட்டி அணிவதால், வெள்ளியில் இருக்கும் காந்த சக்தி கால் நரம்புகள் வழியாக ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டதாக அறியப்பட்டுள்ளது. மேலும் முக்கியமாக கருப்பையில் நோய்கள் வராமல் கட்டுப்படுத்துகிறது.
பெண்கள் மெட்டியை கட்டை விரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், இரத்த ஓட்டம் சீராகவும் இருக்குமாறு பாதுகாக்கப்படுகிறது. காலில் கீழ்ப் பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்புகள் உள்ளன.
மேலும் கர்ப்பத்தின் போது உருவாகும் மசக்கை அறிகுறிகளான மயக்கம், வாந்தி போன்றவற்றை குறைக்கவும், கருப்பையில் உள்ள நீர் சமநிலையில் இருப்பதற்கும் மெட்டி பயன்படுகிறது. கால் விரலில் அணியும் மெட்டியானது நடக்கையில் பூமியில் அழுத்தப்படுவதால் பெண்களின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை, முக்கியமாக கர்ப்பிணி பெண்களின் உடல் பிணிகளைக் குறைக்கும் என்கின்றனர். மேலும் வெள்ளியால் ஆன மெட்டி அணிவது பெண்களுக்கு இயற்கையாக நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க செய்கிறது.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.