பௌர்ணமி திதி
பௌர்ணமி திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் பௌர்ணமி முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஆடி பௌர்ணமி, சித்திர பௌர்ணமி, ஐப்பசி பௌர்ணமி போன்றவை முக்கியமான பௌர்ணமி தினங்களாகும்.
பௌர்ணமி திதியின் சிறப்புகள்
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உயிர்ப்பு ஆற்றல் கிடைக்ககூடிய நாள் தான் பௌர்ணமி தினமாகும். பௌர்ணமி அன்று சந்திரனின் ஆற்றல் பல மடங்கு இருக்கும். சந்திரன் மனோகாரகன் ஆவார். அதாவது நமது மனதை ஆள்பவர். இந்நாளில் மனிதர்களின் மனநலம் பாதிக்கபட்டு பல குற்றங்கள், மற்றும் தவறுகள் நிகழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதை தவிர்க்க தான் இறை நினைப்போடு பௌர்ணமி தினங்களில் கிரிவலம் செய்ய சொன்னார்கள் நம் முன்னோர்கள்.
பௌர்ணமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்
பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் எண்ணிய காரியங்களில் வெற்றி பெற கூடியவர்கள். புத்தி கூர்மை மிகுந்தவர்கள், பொறுமை உடையவர்கள், சத்தியம் தவறாதவர்கள், தயாள சிந்தனை உடையவர்கள், ஆயுள் அதிகம் கொண்டவர்கள், சொன்ன சொல்லை காபாற்றகூடியவர்கள், அழகிய உருவ அமைப்பை கொண்டவர்கள், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், திடமான மனநிலை கொண்டவர்கள், நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். பெற்ற தாய் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் பாயாசம் படைத்து வழிபட வேண்டும்.
பௌர்ணமி திதியில் என்னென்ன செய்யலாம்
பௌர்ணமி திதி என்பது சுமாரான சுபபலன் கொண்ட திதியாகும். இந்நாளில் தாலி கயிறை மாற்றலாம், ஆபரணங்கள் வாங்கலாம், வாகனங்கள் வாங்கலாம், தொழில் தொடங்கலாம், வெளியூர் செல்லலாம், பத்திரபதிவு போன்றவற்றை செய்யலாம்.
பௌர்ணமி திதியில் என்ன செய்ய கூடாது
பௌர்ணமி அன்று புதிய பொருட்களை வாங்குவது, புதிய செயல்களில் ஈடுபடுவது, விற்பது போன்றவற்றை செய்யகூடாது. கிரகபிரவேசம் செய்யகூடாது, மொட்டை அடிக்ககூடாது, வளைகாப்பு செய்யகூடாது, வரன் பார்க்க செல்லகூடாது,
பௌர்ணமி வழிபாடு
பௌர்ணமி தினத்தில் அம்பிகை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. பராசக்தியை இந்நாளில் வழிபட்டு வந்தால் அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கும்.
பௌர்ணமி திதிக்கான தெய்வங்கள்
பௌர்ணமி திதிக்கான தெய்வங்கள் : சிவன், மற்றும் பராசக்தி ஆவார்கள்.
திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.