அமாவாசை திதி
அமாவாசை திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் அமாவாசை முக்கிய இடத்தை பிடிக்கிறது. அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்றைய தினத்தில் இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும்.
அந்த நேரத்தில் இந்த இரண்டு கிரகங்களின் ஆகர்ஷன சக்தி அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் மனித மூளையில் வேகமாக மாற்றங்கள் ஏற்படும். மனமானது கொந்தளிப்பான நிலையில் இருக்கும். எனவே அந்த நாட்களில் புதிய காரியங்களை தொடங்ககூடாது என கூறுவார்கள்.
அமாவாசை திதியின் சிறப்புகள்
அமாவாசை தினம் வரும் போது கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்வதை பார்த்திருப்போம். அதற்கு காரணம் அன்றைய தினத்தில் தெய்வங்கள் மற்ற நாட்களை காட்டிலும் அதிக சக்தியுடன் இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் தான் அமாவாசையில் சிறப்பு பூஜைகள் செய்யபடுகின்றன.
அமாவாசை தினத்தில் தேவதைகள், மகரிஷிகள், காலம் சென்ற நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வருகை தந்து புண்ணிய நதிகளிலும், கடலோரத்திலும், காசி, ராமேஸ்வரம், கயா போன்ற புண்ணிய தலங்களிலும் செய்யப்படும் தர்ப்பன பூஜையை ஏற்று கொள்கின்றனர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அமாவாசை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்
அமாவாசை திதியில் பிறந்தவர்கள் நல்ல திறமை உடையவர்கள். இவர்களுக்கு சுயநலம் இருக்காது. தயாள சிந்தனை உடையவர்கள், சத்தியம் தவறாதவர்கள், இவர்களின் திறமைக்கான அங்கீகாரம் தாமதமாக கிடைக்கும், எதிலும் தன்னை முன்னிலைபடுத்தும் செயலையே செய்வார்கள், தனக்கு தேவையானதை தாங்களே தேடிகொள்வார்கள், எந்நேரமும் சிந்தித்து கொண்டே இருப்பார்கள், எந்த விஷயத்திலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள், பெற்றோரை நேசித்து மரியாதை கொடுக்ககூடியவர்கள், நுட்பமான விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.
அமாவாசை திதியில் என்னென்ன செய்யலாம்
அமாவாசை திதியில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம், குலதெய்வ வழிபாடு செய்யலாம், திருஷ்டி கழிக்கலாம், கோவிலுக்கு செல்வது போன்றவற்றை செய்யலாம்.
அமாவாசை திதியில் என்ன செய்யகூடாது
அமாவாசை திதியில் பூமி பூஜை போடக்கூடாது. சுபநிகழ்ச்சிகள் செய்யகூடாது, நகைகள் வாங்ககூடாது, புதிய முயற்சிகளை செய்யகூடாது, கிரகபிரவேசம் செய்யகூடாது, புதிய வாகனங்கள் வாங்ககூடாது, வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது.
அமாவாசை திதிக்கான தெய்வங்கள்
அமாவாசை திதிக்கான தெய்வங்கள் : பித்ருக்கள், சக்தி, மற்றும் வருணன்.
திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.