சதுர்த்தசி திதி
சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை சுக்கில பட்ச சதுர்த்தசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தசி தினம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசி என்றும் அழைக்கபடுகிறது.
சதுர்த்தசி திதியின் சிறப்புகள்
ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டப்படும் தீபாவளி தினம் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளில் தான் கொண்டாப்படுகிறது. இது ‘நரக சதுர்த்தசி’ என்றும் அழைக்கபடுகிறது. இந்நாளில் தான் பகவான் கிருஷ்ணர் அரக்கனான நரகாசுரனை அழித்தார்.
சதுர்த்தசி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்
சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் அழகான உருவ அமைப்பு கொண்டவர்கள். தனக்கென ஒரு கொள்கை வைத்து அதன்படி நடப்பவர்கள். பிறர் பொருளை விரும்புபவர்கள், சரியான முன்கோபக்காரர்கள், இவர்களுக்கு மற்றவர்களை மனபான்மை குறைவு. உடல் மற்றும் மனரீதியாக பலம் கொண்டவர்கள், சண்டை போடுவதில் வல்லவர்கள், நினைத்ததை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் நாத்திகவாதிகளாகவும், செல்வ வளமுடையவர்களாகவும் இருப்பார்கள். சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் விநாயகருக்கு சத்துமாவு படைத்து வழிபட வேண்டும்.
சதுர்த்தசி திதியில் என்னென்ன செய்யலாம்
சதுர்த்தசி திதி காளி தேவிக்கு உகந்த நாளாகும். இந்த திதி வரும் நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தல், அசைவம் சாப்பிடுதல், பயணங்கள் செய்தல் போன்றவற்றை செய்யலாம். மேலும் விஷத்தை கையாளுதல், தேவதைகளை அழைத்தல், ஆயுதங்கள் செய்தல், மந்திரங்கள் படித்தல் போன்றவற்றை செய்யலாம்.
சதுர்த்தசி திதியில் என்ன செய்யகூடாது
ஞாயிறு அன்று வரும் சதுர்த்தசி நாளில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்நாளில் எந்த நல்ல காரியங்கள் செய்தாலும் அது முழுமையான பலனை தராது.
சதுர்த்தசி திதிக்கான திதி சூன்ய ராசிகள்
சதுர்த்தசி திதிக்கான திதி சூன்ய ராசிகள் மிதுனம் மற்றும் கன்னி ஆகும்.
சதுர்த்தசி திதிக்கான தெய்வங்கள்
சதுர்த்தசி வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : ருத்திரர், மற்றும் காளி
சதுர்த்தசி தேய்பிறை திதிக்கான தெய்வங்கள் : ருத்திரர்
திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.