கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்
கடவுள் சம்பந்தமான கனவுகள் வருவதற்கு முக்கிய காரணம் நீங்கள் உங்களை தாண்டி மற்றவர்களின் நலனை பற்றி யோசிக்கும் பொழுது தான் தோன்றுகிறது. அப்படித் தோன்றும் கனவுகள் சில நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே தெரிவிக்க போகிறது என்று அர்த்தம். இப்படி நம் வாழ்க்கையில் நடக்கப்போகும் நல்லது மற்றும் கெட்டதை நமக்கு உணர்த்தும் வகையில் வரும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. இந்த பதிவின் மூலம் ஆன்மீக ரீதியாக வரும் கனவிற்கு என்ன அர்த்தம் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
- கனவில் கோவிலை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும் என்று அர்த்தம்.
- கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வந்தால்,சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டபடுவீர்கள் என்று பொருள்.
- ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள் மூடப்பட்டது போல கனவு வந்தால் நாம் செய்து வரும் தொழிலில் பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்று பொருள்.
- 4.நாம் கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைய போகிறோம் என்று பொருள்.
- சிவலிங்கம் கனவில் வந்தால் நீங்கள் தினமும் தியானம் செய்யும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது அர்த்தமாகும்.
- 6.கனவில் நாம் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு கண்டால் விரைவில் நல்ல வளர்ச்சியை அடைய போகிறோம் என்று பொருள்.
- 7.எந்த கடவுளை கனவில் கண்டாலும் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் விலகும். எல்லா பிரச்சனைகளிளிருந்தும் வெற்றி கொள்ளும் சக்தி கிடைக்கும்.
- கோவில் கோபுரம் நம் கனவில் வந்தால்வாழ்க்கையில் முன்னேற போகிறோம் என்று பொருள். மேலும் நம்முடைய கடந்த கால பாவங்கள் விலகி விட்டது என்றும் அர்த்தம்.
- கோவிலில் பிரசாதத்தைப் வாங்குவது போல் கனவு கண்டால் நமக்கு நெருங்கிய சிலரால் மனகவலைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
- கோவில் குளம் கனவில் வந்தால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்று அர்த்தம்.
- கடவுளிடம் நாம் பேசுவது போல் கனவு கண்டால் மிகவும் நல்லது, இது விரைவில் நாம் வாழ்வில் நன்மை பெற போவதன் அறிகுறியாகும்.
- மகாவிஷ்ணுவை எந்த கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வ செழிப்பு ஏற்படும் என்று அர்த்தம்.
- மகாவிஷ்ணு கருடன் மீது அமர்ந்து வருவது போல கனவு வந்தால் நம் தொடுத்த வழக்குகள் சாதகமாக முடியும் என்று பொருள்.
- இயேசுவை கனவில் கண்டால் மனதில் அமைதி ஏற்படும்.
- இயேசுவை சிலுவையில் அறைவது போல கனவு வந்தால் துன்பம் ஏற்படும். ஆனால் அந்த சூழ்நிலை விரைவில் மாறும்..
- காளி தேவி கனவில் வந்தால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்று பொருள்.
- கடவுள் விக்கிரகம் கனவில் வந்தால் அந்த கடவுளை தரிசனம் செய்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நன்மை பயக்கும்.
- கோவில் மணியை கனவில் கண்டால் நாம் மனதில் நினைத்த காரியம் ஜெயமாகும்.
- கோவில் மணி அடிப்பது போல கனவு வந்தால் பொருள் வரவு ஏற்படும்.
- கோவில் மணி அறுந்து விழுவது போல கனவு வந்தால் செய்யும் காரியங்களில் இடைஞ்சல்கள் ஏற்படும்.
- கனவில்,கோவில் மணியோசையை கேட்டால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கும். பொருள் வரவு பெருகும் என்று அர்த்தம்.
- ஐய்யனார் தெய்வம் கனவில் வந்தால் சகல சம்பத்தும் கிட்டும்.
- நவகிரகங்கள் கனவில் வந்தால் அருகில் உள்ள நவகிரக கோவிலுக்கு சென்று ஒன்பது முறை நவகிரகங்களை சுற்றி வலம் வர வேண்டும். இல்லையேல் தீமை ஏற்படும்.
- விநாயகர் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் இதுவரை ஏற்பட்ட எல்லா பிரச்சனைகளும் விரைவில் நல்லபடியாக முடிந்து விடும் என்று அர்த்தம்.
- யானை உங்களை துரத்துவது போல கனவு கண்டால் நீங்கள் விநாயகருக்கு நேர்த்தி கடன் பாக்கி வைத்துள்ளீர்கள் என்று பொருள்.
- யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால் நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றியுடன் நிறைவடையும் என்று அர்த்தம்.
- முருகன் கனவில் வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த எல்லா விதமான தோஷமும் நீங்கிவிடும் என்று அர்த்தம். உங்களுக்கு இனி நடப்பது எல்லாமே நல்லதாகவே நடக்கும்.
- அம்பாள் / அம்மன் கனவில் வந்தால் அவளின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று பொருள்.
- அம்பாள் / அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது போல கனவு கண்டால் எந்த தீமையும் நம்மை அண்டாது என்று பொருள்.
- நாம் திருநீறு பூசிக்கொள்வது போல கனவு வந்தால் நல்ல ஞானம் பிறக்கும்.
- கோவில் கனவில் வந்தால் நல்ல பலன்கள் ஏற்படபோகிறது என்று பொருள்.
- சிதிலமடைந்த கோவிலை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டமும் ஏற்படும்.
- கோவிலில் இறைவனை கும்பிடுவது போல கனவு வந்தால் நாம் செய்யும் செயல்களில் முதலில் சில இடர்பாடுகள் ஏற்படும். ஆனால் தெய்வ அருளால் முடிவில் எல்லாம் நன்மையாகவே முடியும்.
- கோவிலுக்கு சென்று விட்டு இறைவனை தரிசிக்க முடியாமல் திரும்புவது போல் கனவு கண்டால் உங்களுக்கு தீராத பிரச்சினை ஒன்று காத்திருக்கின்றது என்பது அர்த்தம்.
- கடவுள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இந்த ஜென்ம புண்ணியத்தை நீங்கள் அடைந்ததாக அர்த்தம்.
- எந்த கடவுளை கடவுளை கண்டாலும் அது நல்ல சகுணம் தான் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.