பிரதமை திதி
அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் திதி பிரதமை திதியாகும். பிரதமை என்பது வடமொழி சொல்லாகும். இதற்கு முதலாவது என்று பொருள். அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமையை கிருஷ்ண பட்ச பிரதமை என்றும் அழைக்கபடுகிறது. பிரதமை திதி ‘பாட்டிமை’ ‘பாட்டிமுகம்’ ‘பாட்டியம்’ ‘பாட்டுவம்’ என்றும் அழைக்கபடுகிறது. பவுர்ணமி தினத்திற்கு பிறகு, சந்திரன் தேய்வதை அவ்வாறு சொல்வார்கள்.
பிரதமை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்
நன்றி மறக்காதவர்கள், இரக்க குணம் கொண்டவர்கள், சந்தோஷ பிரியன், எதையும் யோசிக்கும் புத்தி உடையவர்கள், செல்வந்தர், பொருள் ஈட்டும் திறமை கொண்டவர்கள், பொறுமை உடையவர்கள், கீர்த்தி உடையவர்கள், சுக போக வாழக்கையை விரும்பக்கூடியவர்கள், அமைதியான குணம் கொண்டவர்கள், எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க கூடியவர்கள்.
பிரதமை திதியின் குணங்கள்
பொதுவாக பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். ஏனெனில் அமாவாசை, மற்றும் பவுர்ணமி தினங்களில் பூமியில் கதிர்வீச்சு தன்மையும், ஈர்ப்பு விசையும் மாறுபட்டிருக்கும். அதனால் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் பூமியின் கதிர்வீச்சு குன்றுவதால், எந்த சுபகாரியங்களும் செய்யக்கூடாது என்பது ஜோதிட நம்பிக்கையாகும்.
பிரதமை திதியில் என்னென்ன செய்யலாம்
பிரதமை திதியானது முதல் சந்திர நாள் என்பதால் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். இந்த நாளில் பூஜைகள், அக்னி வேள்விகள், ஹோமங்கள் மற்றும் மங்கள காரியங்கள் செய்ய தகுந்த நாள் ஆகும். கோமாதா வாங்கலாம், மற்றும் மதச் சடங்குகளையும் செய்யலாம். உபகரணங்களை பழுது பார்க்கலாம். பூமி பூஜை போடலாம். கல்வி சம்பந்தமான பணிகளை தொடங்கலாம். வளர்பிறை பிரதமை எதிர்பார்த்த பலனை கல்வியில் தரும். தேய்பிறை பிரதமை குறைவான பலனை தரும். குலதெய்வ கோவிலிற்கு சென்று மொட்டை போடலாம்.
பிரதமை திதியில் என்ன செய்ய கூடாது
பிரதமை திதியில் வெளியூர் பயணங்கள் மற்றும் புதிய செயல்கள் செய்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
பிரதமை திதிக்கான திதி சூன்ய ராசிகள்
பிரதமை திதிக்கான திதி சூன்ய ராசிகள் துலாம் மற்றும் மகரம் ஆகும்.
பிரதமை திதிக்கான தெய்வங்கள்
பிரதமை வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : குபேரன், பிரம்மா
பிரதமை தேய்பிறை திதிக்கான தெய்வங்கள் : துர்கை, அக்னி
திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.