ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள்

ஆண் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள்

ஆண் மற்றும் பெண்ணின் கழுத்தின் முன் பக்கம், பின் பக்கம் போன்ற இடங்களில் இருக்கும் மச்சம் நீண்ட ஆயுளைத் தரும். இவர்கள் மந்தமான போக்கு கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரை சந்தோஷப்படுத்துவதற்காக வேடிக்கையாக பேசுவார்கள். மகிழ்விக்கலாம். இவர்களுக்கு ஆடை ஆபரணங்கள், வாகன யோகம் போன்றவை இருக்கும்.

பெண் உடல் மச்ச பலன்கள்

ஆண் மற்றும் பெண்ணின் தலை முதல் மோவாய் வரை எந்தப் பகுதியில் மச்சம் இருந்தாலும் அவர்கள் ஆசை இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனாலும் கோபமும், பதட்டமும் அதிகம் இருக்கும். பழமையான பழக்க வழக்கங்களில் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில் வசதி வாய்ப்புகள் பெருகும்.

வலது பக்க தோளில் ஆண்களுக்கும், இடது பக்க தோளில் பெண்களுக்கும் மச்சம் இருந்தால் தெய்வீக விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். பிடிவாத குணம் இருக்கும். இவர்கள் எழுத்துத் துறையில் சிறந்த எதிர்காலம் இருக்கும். மேலும் ஜோதிட சாஸ்திரம் அல்லது கைரேகை சாஸ்திரத்தில் அதிக ஞானம் இருக்கும்.

ஆண்கள் மற்றும் பெண்கள் மார்பில் இதயம் இருக்கும் பகுதிக்கு மேலேயோ அல்லது கீழேயோ மச்சம் இருந்தால், மச்சம் இருக்கும் அளவைப் பொறுத்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் அமையும். இவர்கள் பண விஷயத்தில் உஷாராகவும், சிறிது சுய நலவாதியாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு அசையா சொத்துக்கள் வந்து சேரும்.

ஆண் அல்லது பெண்ணின் வலது பாதம், இடது பாதம், உள்ளங்கால் போன்ற இடங்களில் எங்கு மச்சம் இருந்தாலும் அவர்கள் காலப் போக்கில் உயரமாகவும், பருமனாகவும் இருக்கும் உடலைப் பெறுவார்கள். எல்லோரிடமும் தனது கருத்துகளை சொல்ல மாட்டார்கள். யாரிடமும் அவர்கள் மனம் விட்டு பேச மாட்டார்கள். நல்ல பழக்க, வழக்கங்கள் இருந்தாலும் அதனை வாழ்க்கையில் பின்பற்றுவது கடினம். மிகுந்த முன் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். செல்வம், செல்வாக்கு இருந்தாலும் தகுந்த நேரத்தில் இவர்களுக்கு உதவாது.

ஆண் மற்றும் பெண்ணின் இடுப்பின் வலது பக்கத்திலோ அல்லது இடது பக்கத்திலோ, வயிற்றுக்கு கீழேயோ மச்சம் எங்கு இருந்தாலும், அவர்களின்  பேச்சு ஆணித்தரமாக இருக்கும். உயர்ந்த பதவியில் இருப்பவர்களின் நட்பு இவர்களுக்கு இருக்கும். இவர்களுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தானாக வந்து சேரும். இவர்களின் குடும்பம் பெரும்பாலும் கூட்டு குடும்பமாக இருக்கலாம்.

ஆண் மற்றும் பெண்ணின் இடுப்பு பகுதிக்கு கீழ் அதாவது புட்டம் அல்லது வலது பக்கத்திலோ, அல்லது இடது பக்கத்திலோ, அல்லது  தொப்புளுக்கு கீழேயோ மச்சம் இருந்தால் அவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தைக் கொண்டு இருப்பார்கள். மேலும் அவர்களிடம் பிடிவாத குணமும் இருக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக நடந்து கொள்வார்கள். வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள். வாழ்க்கையில் உண்டாகும் மேடு, பள்ளங்களை தங்கள் திறமையால் சமாளித்து அதில் வெற்றியும் அடைவார்கள்.

வயிறு மச்ச பலன் பெண்கள்

ஆண் அல்லது பெண்ணின் வலது தொடையிலோ, அல்லது இடது தொடையிலோ அல்லது முழங்காலுக்கு அருகில் மச்சம் இருந்தால் கல்வி, செல்வம் என அனைத்தும் இவர்களுக்கு கிடைக்கும். இவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதி தான் சொத்துக்கள் அதிகம் சேரும். எப்போதும் ஒரு இடத்தில் அமராமல் ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

ஆண் அல்லது பெண்ணின் வலது முழங்கால் முட்டியிலோ அல்லது இடது முழங்கால் முட்டியிலோ மச்சம் உள்ளவர்கள் தனது விருப்பப்படி தான் காரியத்தை செய்வார்கள். வாழ்வின் பிற்பகுதியில் தான் சகல செல்வங்களையும் பெறுவார்கள். ஆனால், பிடிவாதம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

ஆண்கள் மற்றும் பெண்கள் உடலில் இதயத்திற்குக் கீழ், வயிற்றுப் பகுதிக்கு சற்று கீழாக எந்தப் பகுதியில் மச்சம் இருந்தாலும் அவர்களுக்கு நீதி, நேர்மை போன்ற பண்புகள் நிறைந்து காணப்படும். தான, தருமங்களில் ஈடுபாடு இருக்கும். ஆனாலும் வாழ்க்கையில் போராட்டம் அதிகமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் இவர்களை சூழ்ச்சி செய்து ஏமாற்றலாம்.

ஆண் பெண் மச்ச பலன்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சித்திரையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பன்னிரண்டு தமிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். முன்வைத்த காலை எதிலும் பின் வைக்க மாட்டார்கள்....
பெண் உடல் மச்ச பலன்கள்

பெண் உடல் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் உடல் மச்ச பலன்கள் மச்சம் ஒருவரின் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று கூறுவார்கள். பெண்களுக்கு எந்த இடத்தில் மச்சம் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று மச்ச சாஸ்திரம் என்னும் நூல் கூறுகிறது....
ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...
முடக்கத்தான் மருத்துவ பயன்கள்

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்

முடக்கத்தான் கீரை முடக்கத்தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. இதன் இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிறத்தில்...
பந்தக்கால் நடுதல்

திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடுவது ஏன்?

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்? பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம்...
மேஷ ராசி பொதுவான குணங்கள்

மேஷ ராசி பொது பலன்கள் – மேஷ ராசி குணங்கள்

மேஷ ராசி குணங்கள் மேஷ ராசி யில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகியவை இடம் பெறுகின்றன.  மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவானவார். இந்த நட்சத்திர மண்டலத்தை தொலைநோக்கி...
காபி, டீ

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை தேர்ந்த்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கயமானதாகும். அவ்வாறு நாம் பார்த்து பார்த்து சாப்பிடும் உணவை எப்போது எப்படி சாப்பிட...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.