பட்டர் இறால் முட்டை மசாலா

பட்டர் இறால் முட்டை மசாலா

இறால் முட்டை மசாலா தேவையான பொருட்கள்

  • பட்டர் – 1 கப்
  • இறால் – ½ கிலோ
  • முட்டை – 4 ( வேக வைத்தது )
  • வெங்காயம் –  2 ( பொடியாக நறுக்கியது )
  • தக்காளி –  2 ( பொடியாக நறுக்கியது )
  • பட்டை –  2 துண்டு
  • கிராம்பு –  3
  • பிரியாணி இலை –  2
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி  – சிறிதளவு

செய்முறை

  • முதலில்  இறாலை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
  • எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின்னர்  பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் பாதி அளவிற்கு வதங்கியதும், தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி நன்கு குழைவாகும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் , தக்காளி வதங்கியவுடன் இறாலைச் சேர்த்து வதக்கவும்.
  • இறாலில் உள்ள தண்ணீர் வற்றும் வரை இறாலை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • இறால் தண்ணீர் வற்றி வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
  • இறால் நன்கு வெந்ததும் அதில் 4 முட்டைகளை உடைத்து நன்கு கலந்து இறாலுடன் சேர்த்து கிளறி விடவும்.
  • இறுதியாக பட்டர் கொஞ்சம் சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான இறால் பட்டர் மசாலா ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...
சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும்....
watermelon payasam

உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம் தேவையான பொருட்கள் தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது ) நெய் – தேவையான அளவு முந்திரி, திராட்சை – தேவையான அளவு சர்க்கரை –...
கேச பராமரிப்பு

உங்கள் கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்

கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள் நம் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலைமுடியும் பெரும்பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருந்தால் அது கூடுதல் அழகையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தை...
சுக்ரனின் யோகம்

மகாவிஷ்ணுவின் காலை மகாலக்ஷ்மி பிடித்து விட காரணம்

மகாவிஷ்ணுவின் காலை மகாலக்ஷ்மி பிடித்து விட காரணம் திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகாலக்ஷ்மி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம். மகாவிஷ்ணுவும்,...
மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...
சாப்பிடும் முறை

சாப்பிடும் போது எந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும்?

சாப்பிடும் போது எந்த திசையை நோக்கி சாப்பிட வேண்டும்? அன்றாட பழக்கவழக்கங்களில் நம் முன்னோர்கள் பல சாஸ்திரங்கள் கூறியிருப்பதை இன்றும் நாம் கடைபிடித்து வருகிறோம். நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று உணவு. அதுமட்டுமின்றி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.