இறால் மிளகு தொக்கு
தேவையான பொருட்கள்
- இறால் – 1 கப்
- வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
- தக்காளி – 2 ( பொடியாக நறுக்கியது )
- இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
- மல்லி தூள் – 2 ஸ்பூன்
- கரம் மசாலா – 1 ஸ்பூன்
- சீரகத் தூள் – 1 ஸ்பூன்
- மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- எண்ணெய் – தேவையான அளவு
- முழு மிளகு – 2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி – தேவையான அளவு
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- கடுகு – ¼ ஸ்பூன்
செய்முறை
- மிளகு இறால் தொக்கு செய்வதற்கு முதலில் 2 ஸ்பூன் மிளகை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும்.
- இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- மசாலா பச்சை வாசனை போனவுடன் இறால் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- இறால் சேர்த்து நன்றாக வதக்கிய தண்ணீர் சேர்க்காமல் மிதமான தீயில் வைத்து இறாலை வேகவிடவும்.
- இறாலில் இருந்து தண்ணீர் வடிந்தவுடன் சிறதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.
- இறால் வெந்தவுடன் மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் கலந்து பின் சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான இறால் மிளகுத் தொக்கு ரெடி.