திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
திருவோணம் நட்சத்திரத்தின் இராசி : மகரம்
திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன்
திருவோணம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி
திருவோணம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : விஷ்ணு
திருவோணம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : அம்மன்
திருவோணம் நட்சத்திரத்தின் நட்சத்திர கனம் : மனுஷ கனம்
திருவோணம் நட்சத்திரத்தின் விருட்சம் : எருக்கு
திருவோணம் நட்சத்திரத்தின் மிருகம் : பெண் குரங்கு
திருவோணம் நட்சத்திரத்தின் பட்சி : நாரை அல்லது மாடப்புறா
திருவோணம் நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்
திருவோணம் நட்சத்திரத்தின் வடிவம்
திருவோணம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 22வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘முக்கோல்’ என்ற பெயரும் உண்டு. திருவோணம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் மூன்று பாதச்சுவடுகள், முழக்கோல் போன்ற வடிவங்களில் காணப்படும்.
திருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
இது பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணு அவதரித்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உதவக்கூடியவர்கள். இவர்கள் நல்ல சுபிட்சத்தோடும், படித்தவராகவும், புத்திசாலியாகவும் விளங்குவார்கள். இவர்கள் மற்றவர்கள் செய்யும் பிழைகளை சுட்டிக்காட்டி அதை திருத்தும் இயல்பு கொண்டவர்கள். இவர்களுக்கு இசை, ஜோதிடம், கணிதம் – ஆகியவற்றில் உங்கள் ஈடுபாடு இருக்கும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மிக கவனமாக செயல்படுவார்கள். சுறுசுறுப்பான மனநிலையை உடையவர்கள். சேமிப்பில் நாட்டம் கொண்டு செயல்படுவார்கள். சுத்தமான ஆடை அணிவது இவர்களின் விருப்பமாகும்.
இவர்களுக்கு அற்புதமான, நல்ல சக்திவாய்ந்த உள்ளுணர்வு இருக்கும். இவர்களுக்கு கவர்ச்சிமிக்க, தாராள மனம் படைத்த மனைவி அல்லது கணவன் கிடைப்பார். தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு உடையவர்கள். பெரியவர்களிடத்தில் மரியாதை கொண்டவர்கள். இவர்களுக்கு ஏற்றத் தாழ்வான வாழ்க்கையே அமைகிறது. இவர்களுக்கு வசதியும், வறுமையும் மாறி மாறி வரும் ஆனாலும் சராசரி வாழ்க்கையில் இருந்து விலகமாட்டார்கள். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்பவர்கள். நிலபுலன்களை கொண்டவர்கள். பெரியோர்களிடத்தில் மரியாதை செலுத்துவார்கள். தனிப்பட்ட முறையில் தனக்கென ஒரு வட்டம் வரைந்து கொண்டு வாழ்க்கையை நடத்துவார்கள்.
அமைதியான சுபாவம் கொண்ட இவர்கள் எதையும் ஊடுருவி, அலசி, ஆராயும் தன்மை கொண்டவர்கள். வாசனைப் பொருட்களில் நாட்டம் உடையவர்கள். எதிலும் சிக்கனத்தை விரும்புபவர்கள். பேசும் போதே சிரிக்கும் இவர்களுக்கு பின்னால் மிகவும் கடினமான கோபம் ஒளிந்திருக்கும். சிக்கனமாக இருப்பார்கள். யாருடைய மனதையும் புண்படுத்த மாட்டார்கள். யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். பசியை பொருத்து கொள்ள மாட்டார்கள். மனதுக்கு பிடிக்கவில்லை என்றால் சரவெடியாக வெடிக்கும் குணம் இருந்தாலும், உடனே கோபம் மறைந்துவிடும். உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். செய்த உதவிக்காக பிரதிபலன் எதிர்ப்பார்ப்பதில்லை.
சுறுசுறுப்பான மனநிலையை கொண்டவர்கள். அழகான உடல்வாகு கொண்டவர்கள். எப்பொழுதும் புன்னகை புன்னகையுடன் விளங்கும் முகமும் இருக்கும் இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். இவர்களின் 30 வயது வரை வாழ்க்கையில் பலமாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். அதன்பிறகு சீரான வாழ்க்கை முன்னேற்றம் போன்றவை வந்து விடும். குடும்ப வாழ்க்கை விரும்பியவாறு அமையும். சுத்தமான ஆடை அணிவதை விரும்புவார்கள். பொது விஷயங்களில் ஆர்வமுடன் பங்கேற்பார்கள். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
திருவோணம் நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் திருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் சுகமாக இருப்பதையே விரும்புவார்கள். கர்வம் உடையவர்கள். புத்திசாலிகளாக விளங்குவார்கள். சுத்தமாக இருப்பதையே விரும்புவார்கள். கல்வியில் நாட்டம் உடையவர்கள். தைரியசாலிகள். கலகத்தை விரும்புபவர்கள். சொத்து சேர்ப்பதில் வல்லவர்கள். உடல் பலவீனம் கொண்டவர்கள். ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
திருவோணம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் திருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். பெரியோர்களை மதிக்கக்கூடியவர்கள். ஆன்மிக வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள். தானம்,தர்மம் செய்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். நுண் கலைகளில் ஈடுபாடு கொண்டவர்கள். சிநேகம் இல்லாதவர்கள். ஆசை அதிகம் உள்ளவர்கள். கோபம் இருக்கும் இடத்தில குணம் இருக்கும் என்பார்கள். அது இவர்கள் விஷயத்தில் நிறையவே பொருந்தும். யாரையும் நம்பாதவர்கள். இவர்களுக்கு தலைமை தாங்கும் பண்பு இயற்கையாகவே இருக்கும்.
திருவோணம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் திருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.பொதுத் தொண்டில் ஆர்வம் உடையவர்கள். கற்பனை திறன் மிகுந்தவர்கள். எதிலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். ஒழுக்கம் மற்றும் நேர்மையுடன் இருக்க விரும்புவார்கள். கோபமும், நல்ல குணமும் ஒருங்கே கொண்டவர்கள். கலைகளில் ஈடுபாடு உடையவர்கள். தர்மங்களில் விருப்பம் உடையவர்கள். இவர்கள் தெளிவான சிந்தனை கொண்டவர்கள். எதையும் திட்டமிட்டு செய்வார்கள். அதே சமயம் ஆவேச குணம் கொண்டவர்கள்.
திருவோணம் நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் திருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். உடனடியாக கோபமும், சாந்த குணமும் உடையவர்கள். இவர்கள் பாசமும், நேசமும் மிக்கவர்கள். நியாயமாக இருக்க வேண்டும் விரும்புவார்கள். தான, தர்ம செயல்களால் புகழ் உடையவர்கள். செல்வ வளம் உடையவர்கள். எடுத்து கொண்ட காரியத்தை முடிக்க தீவிரமாக உழைக்க கூடியவர்கள். விவசாய நுணுக்கங்களை அறிந்தவர்கள்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.