கூந்தல் பராமரிப்பு
பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் கூந்தல் தான். அதிலும் நீளமான கூந்தலை உடைய பெண்கள் பார்க்க மிகவும் அழகாகவும் இருப்பார்கள். நீண்ட கூந்தலை உடைய பெண்களுக்கு இயல்பாகவே தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். அத்தகைய கூந்தலை பெண்கள் சிறந்த முறையில் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.
கூந்தலை வெளியில் செல்லும் நேரம் மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் போதும் இரவு தூங்கும் போதும் தலைமுடிக்கு முக்கியத்துவம் அளித்து பராமரிக்க வேண்டும். பொதுவாக பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூந்தலை அலங்கரிப்பதற்கு காண்பிக்கும் அக்கறையை, வீட்டில் இருக்கும்போது காண்பிப்பதில்லை. அதிலும் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை.
தலை முடி நன்றாக வளர வேண்டும் என்று நினைக்கிறார்கள் . ஆனால் அதற்க்கான அக்கறையை காட்டுவதில்லை. கடைகளில் விற்க கூடிய கண்ட கண்ட ஷாம்பூகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஷாம்புவில் உள்ள ரசாயனம், முடியைக் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்கிறது என்பதுதான் உண்மை. இதனால் முடி கொட்டுதல், தலை முடி உடைதல், முடியில் வெடிப்பு, பொடுகு, அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.
கூந்தலை பாதுகாக்க சில எளிய வழிமுறைகள்
- தலை குளித்த உடனே தலையை காயவைக்க வேண்டும்.எனவே ஒரு டவல் மூலம் தலையை சுற்றி காயவைக்கலாம் அல்லது காற்றில் உலரவிடலாம்.
- சுருட்டை முடி அல்லது அடர்த்தியான முடி உள்ளவர்கள், ஈரமான கூந்தலை நன்கு உலர வைத்து பின் சீவ வேண்டும்.
- தலைமுடியை இறுக்கமா பின்னவோ, கட்டவோ கூடாது. தளர்வாக பின்ன வேண்டும்.
- பெரும்பாலும் பெண்கள் இரவில் தூங்கும்போது கூந்தலை இறுக்கமாக கொண்டை போட்டுக்கொள்வது வழக்கம். அது தவறானது.
- இதனால் மயிர்க்கால்கள் கடுமையாகப் பாதிக்கும். கூந்தலின் அடிப்பகுதியில் இருக்கும் வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்காது. அதனால் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படும்.
- இரவு தூங்குவதற்கு முன் கூந்தலை நன்றாக சீவுவது நல்லது. இதனால் கூந்தலில் சிக்கல் விழாமல் இருக்கும். அப்படி இரவில் தூங்கும்போது கூந்தலில் சிக்கல்கள் விழுந்தாலும், எளிதில் சரிப்படுத்திவிடலாம்.
- சிக்கல் கூந்தலுடன் தூங்கினாள் பாதிப்பு அதிகமாகி கூந்தலின் அடர்த்தியும், வலிமையும் குறையும். முடி கொட்டுதல் பிரச்சனையையும் எதிர்கொள்ள நேரிடும்.
- இரவில் தூங்குவதற்கு முன் தலையில் வியர்வையினால் ஈரப்பதம் இருந்தால் மயிர்க்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். இது பொடுகுத் தொல்லை, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
- இரவில் தலைக்கு குளித்தால் கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு தூங்க வேண்டும்.
- இரவு தலையில் எண்ணெய் வைத்து மயிர்க்கால்களை நீவி விட்டால் மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். இதனால் மயிர்க்கால்கள் வலுப்படுவதால், முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
- இரவில் கூந்தலுக்கு எண்ணெய் வைத்து தூங்கினால் காலையில் எழுந்ததும் தலைக்கு குளித்துவிடுவது நல்லது.
- வாரத்திற்கு ஒருமுறையாவது தலையணை உறைகளை மாற்ற வேண்டும். ஏனெனில் தலையில் இருக்கும் எண்ணெயும் தலையணை உறையில் படிந்து அழுக்கு சேர்த்துவிடும். இதனால் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படும்.
- சிறிது கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 4 இரண்டையும் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.
- கூந்தல் அடர்த்தியாக வளர, வாரம் ஒரு முறை செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து சீயக்காய் போட்டு அலசவும்.
- தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிக்க வேண்டும்.
- வாரத்திற்கு ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தடவி குளித்து வர கூந்தல் கருமையுடன் நீண்டு வளரும்.
- தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.