பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தின் இராசி : கடகம்
பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி
பூசம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன்
பூசம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை -: சூரியன்
பூசம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் -: அம்மன்
பூசம் நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் -: தேவகணம்
பூசம் நட்சத்திரத்தின் விருட்சம் -: அரசமரம்
பூசம் நட்சத்திரத்தின் மிருகம் -: ஆண் ஆடு
பூசம் நட்சத்திரத்தின் பட்சி -: நீர்க்காக்கை
பூசம் நட்சத்திரத்தின் கோத்திரம் : -அகத்தியர்

பூசம் நட்சத்திரத்தின் வடிவம்

பூசம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 8ம் இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘காற்குளம்’ என்ற பெயரும் உண்டு. பூசம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் அம்புக்கூடு, அம்பாரம், பசுவின் மடி போன்ற வடிவங்களில் காணப்படும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து துறைகளிலும் ஞானம் கொண்டவர்கள். பெற்ற தாய் தந்தை மீது அன்பு மற்றும் பாசம் கொண்டவர்கள். பெரியவர்களிடம் மதிப்பு மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். மனதில் இறை நம்பிக்கை கொண்டவர்கள். எல்லோரிடமும் அன்புடன் பழகக் கூடியவர்கள். சகல விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள்.

எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து புன்னகை நிறைந்த முகத்துடன் வாழக்கூடியவர்கள். எந்த செயலை எடுத்து கொண்டாலும் அதை வெற்றியுடன் முடிக்கக் கூடியவர்கள். நண்பர்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கும். இவர்கள் எல்லாவிதமான நெருக்கடியையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு செய்வதற்கு கஷ்டமாக இருக்கும் விஷயங்களை கூட இவர்கள் மிக எளிமையாக முடித்து காட்டுவார்கள்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை பலரும் விரும்பி நேசிப்பார்கள். இவர்களுக்கு சமய ஈடுபாடும், தாராள சிந்தையும், மற்றவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையும் காணப்படும். இவர்கள் நன்கு படித்த புத்திசாலியாகவும், தெய்வ நம்பிக்கையுடன், உண்மையில் உறுதி கொண்டவராகவும் இருந்து, வசதியான வாழ்க்கை நடத்துவார்கள். இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவும், செல்வந்தராகவும், நல்ல உடல்நலன் அமைந்தவராகவும் காணப்படுவார்கள். இவர்கள் 35 வயதுக்குப் பின்னர் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல வசீகரமான தோற்றம் கொண்டவர்கள். எந்த துறையில் இவர்கள் ஈடுபட்டாலும், கலை நுட்பமும், வாக்கு சாதுர்யமும் பிரகாசிக்கும். எப்போதும் நல்ல சுத்தமான ஆடைகளையே உடுத்துவார்கள். இவர்களுக்கு மனம் வருந்தும்படி பிரச்சனகள் ஏற்பட்டால் தேவையில்லாத சிந்தனையில் சிக்கி சுய பலத்தை இழந்து பவீனமாகிவிடுவார்கள்.

இவர்களின் மன நோய்க்கு பெரும்பாலும் கவலைகளே காரணம். உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தாங்கிக் கொள்ளும் இவர்களால் மனவலிகளை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது. குடும்ப அமைப்பை பொருத்தவரை சிறுசிறு பூசல்கள் எழுந்தாலும் விரைவில் மறைந்துவிடும். இவர்கள் எந்த பிரச்சனையையும் கண்டு பயப்படமாட்டார்கள். அந்த பிரச்சனையை அலசி ஆராய்ந்து அதற்காண தீர்வை கண்டு பிடிக்காமல் விடமாட்டார்கள். மற்றவர்களை கவரக்கூடிய ஆற்றலை பெற்று இருப்பார்கள்.

இவர்கள் மனசாட்சிப்படி நடக்க வேண்டும் என நினைப்பவர்கள். வாசனை திரவியங்களை அதிகம் விரும்புவார்கள். எல்லா செயல்களிலும் வைராக்கியத்தோடு ஈடுபட்டு வெற்றி கொடியை நாட்டுவார்கள். இவர்களுக்கு சிறு வயதில் இருந்தே குடும்ப விவகாரங்களில் அதிக ஈடுபாடும், அக்கறையும் இருக்கும்.

பூசம் நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் பூசம் நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்களிடம் தலைமை தாங்கும் பண்பு அதிகம் இருக்கும். இவர்கள் நீண்ட ஆயுளை உடையவர்கள். உடலில் நோய் உடையவர்கள். இறை நம்பிக்கை உடையவர்கள். பெருந்தன்மையான குணம் உடையவர்கள். இவர்கள் எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓய மாட்டார்கள். தர்ம உணர்வு உடையவர்கள். நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் பூசம் நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். செல்வங்கள் உடையவர்கள். இவர்களிடம் கோபமும், குணமும் சேர்ந்தே இருக்கும். இவர்களில் பலர் அழகாக இருப்பார்கள். மென்மையான குணம் கொண்டவர்கள். நிதானம் உள்ளவர்கள். எச்செயலையும் நிதானமாக செய்யும் பழக்கமுடையவர்கள். புதிய நபர்களிடம் நட்பு கொண்டவர்கள். இவர்கள் அந்நியரிடம் நட்பாக இருப்பார்கள். எல்லோரிடமும் நட்பாக பழகுவார்கள்.

பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் பூசம் நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இறைநம்பிக்கை உடையவர்கள். உறவினர்களுக்கு பிடித்தவர்கள். பிறரை வழி நடத்தி செல்லும் ஆற்றல் அதிகம் இருக்கும். இவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள். எல்லோரையும் சமமாக எண்ணுவார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். புகழ் மற்றும் பெருமைகள் உடையவர்கள். இவர்கள் அண்டை அயலாரிடமும், சொந்தகாரர்களிடமும் அன்பாக இருக்க விரும்புவர். நினைத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் பூசம் நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். சண்டை இடுவதில் வல்லவர்கள். பேராசை உடையவர்கள். சினம் கொண்டவர்கள். பெண்களிடம் அன்பாக இருப்பார்கள். இவர்களுக்கு பொருட்கள் ஈட்டுவதில் அதிக ஆர்வம் இருக்கும். இவர்கள் எதில் ஈடுபட்டாலும் அதில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள். இவார்களுக்கு சுயநலம் அதிகம் இருக்கும்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

குடைமிளகாய்

உடல் எடையை எளிதாக குறைக்க உதவும் 10 காய்கறிகள்

எடை குறைக்க உதவும் காய்கறிகள்  உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதில் பலருக்கும் தற்போது  விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் பருமன் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் உடலில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. எடை...
ஆனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வருவது ஆனி மாதமாகும். ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள், மேலும் மிகுந்த பொறுமைசாலிகள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். இவர்களுக்கு சிந்திக்கும்...
ஆண் கால் பகுதி மச்சத்தின் பலன்கள்

ஆண் கால் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கால்கள் மச்ச பலன்கள் உடலில் ஒவ்வொரு பாகத்தில் தோன்றும் மச்சங்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை மச்ச சாஸ்திரம் என்னும் நூல் விளக்குகிறது. அந்த வகையில் ஆணின் கால் பகுதியில் எந்த இடத்தில்...
சாத்துக்குடி பழம் மருத்துவ நன்மைகள்

மருத்துவ குணங்கள் நிறைந்த சாத்துக்குடி பழம்

சாத்துக்குடி பழம் சாத்துக்குடி பழம் சிட்ரஸ் வகை பழங்களில் ஒன்றாகும். தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், சாத்துக்குடி தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் மத்திய தரைக்கடல் பகுதியின் பிராந்தியங்களில் சாத்துக்குடி வளர்க்கப்பட்டது. இது மெக்ஸிகோ...

தித்திக்கும் கோவில் சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல் தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் பாகு வெல்லம் – 1 கப் பாசி பருப்பு – ¼ கப் நெய் – 100 கிராம் ஏலக்காய் – சிறிதளவு ...
உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்   சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல்,...
கோவில் குளத்தில் காசு போடுவது

கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.