லிப்ஸ்டிக்
இன்று பலரும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு தவிர்க்க முடியாத அழகு சாதன பொருளாக லிப்ஸ்டிக் மாறியுள்ளது. முன்பெல்லாம் எங்கோ ஒருவர் தான் லிப்ஸ்டிக்கை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று பலரும் தினமும் உபயோகப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
லிப்ஸ்டிக் போட்டால் தான் நாம் அழாகாக இருக்கிறோம், நம் உதடுகள் அழகாக இருக்கிறது என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் முற்றிலும் அது தவறு. அழகாக இருக்கும் அனைத்தும் ஆரோக்கியமானது அல்ல என்பதை பலரும் அறியவில்லை.
லிப்ஸ்டிக் நம் உடலுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்துகிறது. லிப்ஸ்டிக் உபயோகப்படுத்துவதால் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. ஏன் என்றால் லிப்ஸ்டிக்கில் பல நச்சுபொருட்கள், கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன.
நச்சுத்தன்மை நிறைந்த லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதால் பாதிப்பு நம் உதடுகள் மட்டுமல்ல நம் உள்ளுறுப்புகளும் பாதிப்படைகின்றன. விஷம் என்று தெரியாமல் பல பேர் அதை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன்பு அதில் உள்ளடங்கி இருக்கும் பொருட்களை கவனியுங்கள். அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்துவது நம் உடலுக்கு நல்லது என்பதை தெரிந்து பயன்படுத்த வேண்டும்.
லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்
- லிப்ஸ்டிக்கை அடிக்கடி பயன்படுத்துவதால் இயற்கையாகவே உதட்டில் இருக்கும் பொலிவை இழந்து வறட்சி வெடிப்புகள் ஏற்படும்.
- லிப்ஸ்டிக்கில் குரோமியம், காட்மியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் தினமும் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தினால் உடலில் உள்ள உறுப்புகள் பாதித்து கடுமையான நோய் ஏற்பட வழிவகுக்கின்றது.
- லிப்ஸ்டிக்கை தினமும் பயன்படுத்துவதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
- லிப்ஸ்டிக்கை அதிக அளவில் பயன்படுத்துவதால் புற்றுநோய் கட்டிகள் வளர ஆரம்பிக்கும்.
- லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு நரம்பு மண்டலம் மற்றும் மூளை நரம்புகள் பாதிப்படைகிறது.
- லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது அவற்றில் சேர்க்கப்படும் நச்சுப் பொருட்கள், நிறமிகளால் ஒவ்வாமை , அலர்ஜி, அரிப்பு போன்றவை ஏற்படக் கூடும்.
- லிப்ஸ்டிகை நீண்ட நாள் அதன் நிறம் மாறாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
- தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துவதன் விளைவாக, சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம். லிப்ஸ்டிக்கில் அதிக அளவு காட்மியம் இருப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
உதடுகளை எப்படி பராமரிப்பது ?
- நம் உதடுகளை இயற்கையான முறையிலேயே அழகாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
- உதட்டில் சிறிதளவு தேனை தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். லிப் பாமிற்கு பதிலாக தேனை உபயோகித்தால் நாளடைவில் வசீகரமான உதடுகள் கிடைக்கும்.
- வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 20 நிமிடம் வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பதத்தை தந்து உதடுகள் வறட்சி அடையாமல் தடுத்து உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்கிறது
- கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பின்னர் 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை சிவப்பு நிறத்தில் மாற்றும்.
- தயிரை தினமும் உதடுகளில் தடவி வந்தால் அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
- உதடுகளில் ஏற்படும் வறட்சியை தடுக்க தேங்காய் எண்ணெய்யை அல்லது பாதாம் எண்ணெய் உதடுகளில் தடவி வரலாம். இதனால் உதடுகள் மென்மையாகவும் , ஈரப்பதத்துடனும் இருக்கும்.
- உதடுகளை சிவப்பாக வைத்துக் கொள்ள கெமிக்கல் நிறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து பீட்ரூட் சாறினை பயன்படுத்தலாம்.