அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
அஸ்வினி நட்சத்திரத்தின் இராசி : மேஷம்.
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி : கேது.
அஸ்வினி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய்.
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை – சரஸ்வதி
அஸ்வினி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் – விநாயகர்
அஸ்வினி நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் (குணம்) – தேவகணம்
அஸ்வினி நட்சத்திரத்தின் விருட்சம் – எட்டி (பாலில்லா மரம்)
அஸ்வினி நட்சத்திரத்தின் மிருகம் – ஆண் குதிரை
அஸ்வினி நட்சத்திரத்தின் பட்சி – ராஜாளி
அஸ்வினி நட்சத்திரத்தின் கோத்திரம் – பரத்துவாசர்
அஸ்வினி நட்சத்திரத்தின் வடிவம்
அஸ்வினி நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 1வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘புரவி’ என்ற பெயரும் உண்டு. அஸ்வினி நட்சத்திரம் வான் மண்டலத்தில் குதிரை முகம் வடிவில் காணப்படும்.
அஸ்வினி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி ‘ஞானகாரகன்’ என அழைக்கப்படும் கேது பகவான் என்பதால் ஒருவரை பார்த்த மாத்திரத்தில் அவர் எப்படிபட்டவர் என எடை போடுவதில் வல்லவர்கள். கேது ஒரு ஆன்மீக கிரகமாக இருப்பதால் இயற்கையாகவே இவர்களுக்கு ஆன்மீக உணர்வு அதிகம் இருக்கும். நட்சத்திர அதிபதியான செவ்வாய்க்கு உரிய கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சண்டையில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும், அயராத உழைப்பை கொண்டு வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நல்ல புத்திசாலியாகவும், பலராலும், விரும்பி நேசிக்கப்படுபவர்களாவும், செல்வந்தராகவும், இருப்பார்கள். மேலும் பிறருக்கு மரியாதை கொடுக்கும் பண்பாடும், உண்மை பேசும் மணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதான சுபாவமும் இவர்களிடம் காணப்படும். இவர்கள் தாங்கள் செய்யும் தொழிலில், நன்கு பயிற்சி பெற்றவராக இருப்பார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், இவர்களுக்கு நல்ல உறவு இருக்கும். இவர்கள் நல்ல உடையுடுத்திடுவதிலும், விதவிதமான ஆபரணங்கள் அணிவதிலும் அதிகம் ஆசை கொண்டவர்கள். மனசாட்சிக்கு உட்பட்டு எல்லா காரியத்தையும் செய்வார்கள்.
இவர்கள் பார்ப்பதற்கு அமைதியாக காட்சி அளித்தாலும், தங்களுடைய காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என மனதில் நினைத்தால் அக்காரியத்தை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள். பிடிவாத குணமிக்கவர்கள். தவறுக்காக மன்னிப்பு கேட்கும் இயல்பை கொண்டவர்கள். எந்த காரியத்தையும் தைரியத்துடன் செய்து முடிப்பவராக இருப்பார்கள். தனது தாய் தந்தையர் மீது ஓரளவு பாசம் உடையவராக இருப்பார்கள்.
இவர்களுக்கு தன்மானமும் சுய கௌரவமும் அதிகம். எதையும் சுயமாக சிந்தித்தே செயல்படுத்துவார்கள். பிடிவாத குணம் அதிகம் இருக்கும். துணிச்சலாகவும் அதே சமயம் தன்னம்பிக்கையுடனும் செயல்பட கூடியவர்கள். சில சமயம் தங்கள் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டு அதனால் பெரும் துன்பங்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப அமைப்பை பொறுத்தவரை உண்மையாக நேசிப்பவர்கள்.
பெண்களிடம் இனிமையாக பேசக்கூடியவர். இவரை அவமதித்தால் மனதில் பழிவாங்கும் எண்ணம் உடையவராக இருப்பார்கள். அழகும், முரட்டுச் சுபாவமும் உடையவராக இருக்கக்கூடும். சிக்கனவாதிகள். இவர்கள் மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். சில சமயங்களில் அவர்களின் சாமர்த்திய பேச்சால் மற்றவர்களிடம் அவர்களுக்குண்டான மதிப்பை பெற்றிடுவீர்கள். சேமித்து வாழ வேண்டும் என விரும்புவார்கள். அவர்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்துவார்கள்.
இவர்கள் தான, தருமம் செய்ய ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களிடம் பொய் பேசுவதை விரும்பமாட்டார்கள். மிகுந்த புகழை உடையவர்கள். சிவந்த கண்களையும், அகன்ற மார்பையும் உடையவர்கள். உயர்ந்த நெற்றி உடையவர். அமைதியான சாத்வீக குணத்தை உடையவர்கள்.
அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். அதிக கோபம் மற்றும் பிடிவாத குணம் இருக்கும். அடிக்கடி சண்டையில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவார்கள். இவர்கள் மன சஞ்சலம் உடையவர்களாக இருப்பார்கள். அழகாக இருக்க வேண்டும் என விரும்புவர்கள். எல்லோரிடமும் அன்பாக இருப்பார்கள்.
அஸ்வினி நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். சாந்தகுணம் மற்றும் பொறுமைசாலியாக இருப்பார்கள். மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள். உயர்ந்த புகழ் மற்றும் கௌரவத்தை அடைவார்கள். பிறரை எடை போடுவதில் வல்லவர்கள். மற்றவர்கள் பேசுவதை வைத்தே அவரின் எண்ண ஓட்டங்களை அறிபவர்களாக இருப்பார்கள். எல்லோருக்கும் நன்மை செய்பவர்களாக இருப்பார்கள். நல்ல பண்புகளை உடையவர்களாக இருப்பார்கள்.
அஸ்வினி நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள். சாதுர்யமான பேச்சுத் திறமை கொண்டவர்கள். கல்வி மற்றும் நுட்பமான ஆராய்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். வாதம் செய்வதில் வல்லவர்கள். கற்பனையில் சிறந்தவர்கள். தாய் மீது அதிக அன்பு கொண்டவர்கள். இவர்கள் கணக்கு தொடர்பான துறையில் அதிக ஆர்வமுடையவரை இருப்பார்கள். நல்ல கூரிய அறிவு உடையவர்களாக இருப்பார்கள். நல்ல செயல்களையே நினைப்பவர்களாக இருப்பார்கள்.
அஸ்வினி நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். பிறரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் கொண்டர்வர்கள். முன் கோபம் அதிகம் உடையவர்கள். தர்ம சிந்தனையும், தெய்வ பக்தியும் உடையவர்கள். அரசு தொடர்புடைய துறைகளில் ஈடுபாடு இருக்கும். இவர்கள் மிகுந்த அறிவாளிகள். சகல கலைகளையும் அறிந்தவர்கள். இந்திரன் போல வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களிடம் காம உணர்ச்சி அதிகம் இருக்கும். எதற்கும் பயப்பட மாட்டார்கள்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்