வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வாய் துர்நாற்றதிற்க்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது ?

காலை இரவு என இரண்டு வேளையும் பல் துலக்கினாலும் சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் வாயில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம் போய்விடும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் சுத்தமாக பல் துலக்கினாலும் வாய்துர்நாற்றம் வரும். காரணம் என்னவென்றால், வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. வயிற்றுக் கோளாறு  அல்சர், நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது

செரிமான கோளாறு காரணமாகவும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். ஆனால் சில நேரங்களில் அது உள்ளே காணப்படும் சில பிரச்சினைகளை பற்றி நமக்கு உணர்த்தும் எச்சரிக்கையாகவும் அது இருக்க கூடும். வயிற்றில் புண் இருந்தால் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படுகின்றன.

எந்த ஒரு உணவுப் பொருளை சாப்பிட்ட பின்னரும் நன்றாக வாயை சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் உணவுத் துகள்கள் நம் பற்களில், ஈறுகளில், நாக்கில், தங்கி கெட்ட பாக்டீரியாக்களை உருவாக காரணமாக அமைந்து விடுகிறது.

நாம் இரவில் சாப்பிடும் உணவில் அதிகப்படியான மாசாலா, எண்ணெய் பதார்த்தங்கள், பூண்டு, வெங்காயம் , போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

பற்களை இரண்டு வேளையும் சுத்தம் செய்வது நல்லது. குறைந்தது 2 நிமிடமாவது பொறுமையாக பல் துலக்க வேண்டும். அவசர அவசரமாக பல் துலக்கக் கூடாது. பற்களை சுத்தம் செய்யும் போது நாக்கினையும் சுத்தம் செய்ய வேண்டும்.

வாய் துர்நாற்றம் ஏற்படக்  காரணம்

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். அதாவது அல்சர் நோய் உள்ளவர்களுக்கு நிச்சயம் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

வாய் துர்நாற்றம் நீங்கதொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை (Infection) ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும். இவ்வாறு வரும் போது வாயில் துர்நாற்றம் ஏற்படும்.

வாய் துர்நாற்றத்தை தடுக்க சில எளிய வழிகள் 

  1. காலையில் எழுந்ததும் பிரஷ் செய்வதற்கு முன்பு இரண்டு ஸ்பூன் நல்லண்ணெய் வாயில் விட்டு மூன்று நிமிடம் வரை வாயை நன்கு கொப்பளிக்கவும்.
  2. தினமும் காலையில் எழுந்துததும் பல் துலக்கிய பின் தண்ணீர் குடிப்பது அவசியம்.
  3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம்.
  5. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
  6. வாய் புத்துணர்ச்சியாக இருக்க சில புதினா இலைகளை மென்று சாப்பிடலாம்.புதினா உங்களது வாயில் உள்ள பாக்டீரியாவை அழிக்கிறது.
  7. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
  8. கிராம்பு சிறிதளவு எடுத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.  இதனை காலை உணவு எடுத்துக் கொண்ட பின் விரல்களால் சிறிதளவு எடுத்து தேனில் கலந்து செய்து சாப்பிட்டு வரலாம்.
  9. அதிக தண்ணீர் குடிக்கவேண்டும். இது வயிற்றிலுள்ள நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
  10. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
  11. நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதனால்செரிமானகோளாறு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
  12. வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை தவிர்க்கலாம்.
  13. மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடல் சிறந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சாக்லெட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

சாக்லெட் உடலுக்கு நல்லதா ? கெட்டதா ?

சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா ? குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே சாக்லெட் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து...
banana halwa recipe

வாயில் வைத்த உடன் கரையும் வாழைப்பழ அல்வா

வாழைப்பழ அல்வா தேவையான பொருள்கள் வாழைப்பழம் – 3 பால் – 1 கப் சர்க்கரை – ½ கப் நெய் – ¼ கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு சோள மாவு...

சகட தோஷம் என்றால் என்ன? சகட தோஷ பரிகாரங்கள்

சகட தோஷம் சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச்...

சீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள்

சீந்தில் கொடி சீந்தில் என்பது மரங்களில் பற்றி படரும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் போன்ற மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம்...
கனவில் பூச்சிகளை கண்டால்

பூச்சிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூச்சிகள் கனவில் வந்தால் கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. நாம்...
sandal powder

தழும்பை மறையவைக்கும் எளிய இயற்கை மருத்துவம்

தழும்புகள் மறைய வைப்பது எப்படி ? தழும்புகள் பொதுவாக இறுக்கமான ஆடைகள் அணிவதால், அம்மை தழும்புகள், பிரசவத் தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தினால் ஏற்படும் தழும்புகள், விபத்தினால் ஏற்படும் தழும்புகள்,...
யோகங்கள் 27

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #5

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.