உடல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளும் வெளியேற்றும் வழிகளும்

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் அற்புத வழிகள்

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்ட பின் அதன் கழிவுகள் மலம் மற்றும் சிறுநீர் கழித்தலின் மூலம் வெளியேறி விடும். சில சமயங்களில்  கழிவுகள் சரியாக வெளியேறாமல் உடலில் தேங்குவதால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை பல வித ஆரோக்கிய குறைபாடுகள் நமக்கு ஏற்படுகிறது.

உடல் கழிவுகள் நீங்க ஆரம்ப நிலையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.ஆனால் நாளைடைவில் அது நம் உடலுக்கு பல்வேறு உபாதைகள் வருவதற்கு காரணமாக மாறிவிடுகிறது. உடலில் நச்சுகள் சேர சேர அவை ஆரோக்கியத்தில் குறைபாட்டை உண்டாக்கும். அப்போது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தன்னுடைய இயக்கத்தை குறைத்துக்கொள்ளும், உடல் உறுப்புகளும் பாதிக்கப்படும்.

உடல் கழிவால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் வெளித்தோற்றமும் பாதிக்கப்படும். இளமையிலேயே முதுமையான தோற்றம் உருவாகும். சுறுசுறுப்பு குறைந்து சோர்வு அதிகரிக்கும். கழிவுகளால் சரும நோய்கள், மூட்டு வலி, காய்ச்சல் போன்ற பல பிரச்சினைகள் உண்டாகும்.

உடலில் கழிவுகள் இருப்பதற்கான அறிகுறிகள்

  1. உடல் பலுவாக இருப்பது போன்ற உணர்வு மற்றும் சோம்பல் ஒழுங்கற்ற அல்லது குறைவான அளவில் பசி இருப்பது பொதுவான உடல் மற்றும் மூட்டு வலிகள்.
  2. கறை, முகப்பரு போன்றவை ஏற்பட்டு தோல் பார்க்க மந்தமாக இருக்கும்.
  3. வயிறு வீக்கம், வாயில் உலோகதன்மை கொண்ட சுவை, நாக்கில் வெள்ளை நிறத்தில் புள்ளி இருப்பது, உடலில் வாய்வு தேங்கியிருத்தல், மூச்சு மற்றும் வியர்வையில் துர்நாற்றம் வீசுதல். மலச்சிக்கல், துர்நாற்றம் வீசும் மலம் போன்றவை இருக்கலாம்.
  4. மனம் தெளிவு மற்றும் ஆற்றல் இல்லாமல் இருப்பது. களைப்பு, எதிலும் ஆர்வமற்ற உணர்வு, வயிறு கால்கள் அல்லது உடல் முழுவதும் கனமாக உணர்வது, சைனஸ், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது, உடலில் தடைபடும் உணர்வு போன்றவை கூட உடலில் இருக்கும் நச்சுகளுக்கான அறிகுறிகள்.
  5. அதே போன்று இரவில் நன்றாக தூங்கும் மறுநாள் சோர்வை எதிர்கொண்டால் அதுவும் நச்சு இருப்பதற்கான அறிகுறிகள்.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றஉடல் கழிவுகளை நீக்க சில சிறந்த வழிகள்

  1. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். அதோடு, உங்களின் செரிமானத்தையும் இது மேம்படுத்த உதவும்.
  2. இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் குடல் சுத்தமாகி விடும்.
  3. நாம் சாப்பிடும் உணவில் ஆர்கானிக் முறையில் கிடைத்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. அதோடு, பருப்பு வகைகள், முழு தானியங்கள், நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, பச்சை நிற காய்கறிகளில் அதிக அளவிலான மைக்ரோசாஃப்ட் நியூட்ரியன்ஸ், குறைந்த அளவிலான கலோரிகள் உள்ளன.
  4. கற்றாழை ஒரு நச்சுக்களை வெளியேற்றும் பொருளாகவும் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதன் இலையில் உள்ள சதைப்பற்று பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு நாளைக்கு பல முறை எடுத்து வாருங்கள்.
  5. நச்சுகளை நீக்கும் போது உணவில் குளிர்ந்த பானங்கள், அதிகப்படியான ஆல்கஹால், காஃபின், புகை பிடிக்கும் பழக்கம், அதிகமாக பால் பொருட்களை சாப்பிடுதல், அதிக இனிப்பு பழங்கள், உணவுகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  6. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மாவு பொருட்கள், பழைய உணவு, பதப்படுத்தப்படும் உணவு, மைக்ரோசாஃப்ட் ஓவனில் சமைக்கப்பட்ட உணவுகள், ஊறுகாய் மற்றும் வினிகர் உட்பட புளிக்க வைக்கப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  7. தினமும் டீ, காபி குடிப்பதை தவிர்த்து மூலிகை டீயை தினமும் அருந்துவது நல்லது. உடலில் உள்ள நச்சுகளை நீக்க வேண்டும் எனில் அதற்கான பெஸ்ட் சாய்ஸ் பிளாக் டீ அருந்துவது தான்.
  8. உணவில் நிறைய மஞ்சள், சீரகம், கொத்துமல்லி, கடுகு விதைகள் போன்ற மூலிகை மற்றும் அதிக மசாலாப் பொருட்களை சேர்த்துக் கொள்ளவும். ஆமணக்கு எண்ணை சிறிய அளவில் எடுத்துக் கொள்வது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் நல்ல பயனைத் தரும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திதியும் நெய்வேத்தியமும்

எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்

திதி என்றால் என்ன ? இறை வழிபாடு என்பது நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இறைவழிபாடு செய்யும்போது மனம் அமைதி அடையும், மன நிம்மதி உண்டாகும், புத்தி தெளிவடையும், எதிர்மறை எண்ணங்கள்...
மோதிரம் எந்த விரலில் அணியலாம்

சாஸ்திரப்படி எந்தெந்த விரல்களில் மோதிரம் அணியலாம்?

சாஸ்திரப்படி எந்தெந்த விரல்களில் மோதிரம் அணியலாம்? பொதுவாக மோதிரம் அணிந்து கொள்ளும் பழக்கம் நம் அனைவரிடமும் உள்ளது. இது பழங்காலம் முதலே நடைமுறையில் இருக்கும் வழக்கங்களில் ஒன்றாககம். அதிலும் தங்க மோதிரம் என்பது நம்முடைய...
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சதயம் நட்சத்திரத்தின் இராசி : கும்பம் சதயம் நட்சத்திரத்தின் அதிபதி : ராகு சதயம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி சதயம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : யமன் சதயம் நட்சத்திரத்தின் பரிகார...
மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?எவ்வாறு பார்க்க வேண்டும்

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன? திருமணம் ஆகப்போகும் மணமகன், மணமகள் இருவருக்கும் இடையே மகேந்திர பொருத்தம் இருப்பது மிகவும் முக்கியமாகும். மகேந்திர பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்தை நிலைக்க செய்வது, அதாவது இந்த மகேந்திர...
இறால் மிளகு வறுவல்

ஸ்பைசி இறால் மிளகு தொக்கு செய்வது எப்படி

இறால் மிளகு தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1 கப் வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது ) தக்காளி - 2  ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி பூண்டு...
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அனுஷம் நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம் அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி அனுஷம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் அனுஷம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : லக்ஷ்மி அனுஷம் நட்சத்திரத்தின் பரிகார...
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரோகிணி நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம் ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன் ரோகிணி நட்சத்திரத்தின் அதிதேவதை : பிரம்மா ரோகிணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.