கேரட் அல்வா
தேவையான பொருட்கள்
- கேரட்
- சர்க்கரை
- பால்
- ஏலக்காய்
- முந்திரிப் பருப்பு
6.உலர்ந்த திராட்சை
- நெய்
செய்முறை
- காரட்டை தோல் சீவி சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதனை நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு அடி கனமான பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் கடாய் எடுத்துக் கொள்ளவும்.
- பாத்திரம் நன்கு சூடானதும் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
- நெய் சூடானதும் அதில் முந்திரி திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதே பத்திரத்தில் இன்னும் சிறிதளவு நெய் சேர்த்து துருவி வைத்துள்ள கேரட்டை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- கேரட்டின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- கேரட் நன்கு வதங்கிய பின் அதில் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து கொள்ளவும்.
- கேரட் மூழ்கும் அளவிற்கு பால் சேர்த்துக் கொள்ளவும்.
- பாலுடன் சேர்ந்து கேரட் வேகும் வரை நன்கு கிளறி விடவும்.
- கேரட் வெந்தவுடன் அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
- சர்க்கரை சேர்த்த பின் நன்கு கிளறி விடவும்.
- பால் வற்றி கேரட் நன்கு சுருண்டு வரும்போது கொஞ்சம் நெய் சேர்த்து கிளறி விடவும்.
- பின்னர் வாசனைக்காக ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- இறுதியாக கொஞ்சம் நெய் சேர்த்து நன்கு பின் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கேரட் அல்வா ரெடி.