27 நட்சத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

27 நக்ஷத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

நக்ஷத்திரங்கள் 27 என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ல் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் ஒரு கோயில் உண்டு. மேற்படி அவரவர் நக்ஷத்திரத்திற்கு உரிய கோயிலை தரிசித்தால் எண்ணற்ற நன்மைகளை வாழ்வில் பெறலாம். இதன் அடிப்படையில் 27 நக்ஷத்திரத்திற்கு உரிய கோயில்கள் பின்வருமாறு…

27 நட்சத்திரங்களும் கோவில்களும் அஸ்வினி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இருந்து மேலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

பரணி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய திருத்தலம், அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் நல்லாடை என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

கார்த்திகை

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், காத்ர சுந்தரேஸ்வரர் திருக் கோவில். மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சா நகரம் உள்ளது. இதன் மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சாலையில் அரை கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

ரோகிணி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், அவசியம் வழிபட வேண்டியது, பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.

மிருகஷீரிஷம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், ஆதிநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

திருவாதிரை

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், அபய வரதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து 12 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை அடையலாம்.

புனர்பூசம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், அதிதீஸ்வரர் திருக்கோவிலை வழிபாடு செய்யுங்கள். இந்தக் கோவில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 67 கிலோமீட்டர் தொலைவில் வாணியம்பாடி உள்ளது. அங்கிருந்து 3 கிலோமீட்டரில் பழைய வாணியம்பாடி இருக்கிறது.

பூசம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், அட்சய புரீஸ்வரர் திருக் கோவில். பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கிலோமீட்டர் சென்றால் விளங்குளம் என்ற ஊர் வரும். அங்கிருந்து தெற்கே 2 கிலோ மீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளம் வந்தடையலாம்.

ஆயில்யம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், கடற்கடேஸ்வரர் ஆலயம். கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிசநல்லூர். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருந்துதேவன்குடி என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது.

மகம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், மகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் வழிபட வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் விராலிப்பட்டி விளக்கு உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

பூரம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் திருவரங்குளம் உள்ளது.

உத்தரம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் இடையாற்று மங்கலம் என்ற ஊரில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லால்குடி சென்று, அங்கிருந்து 5 கிலோமீட்டர் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

அஸ்தம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் இருக்கிறது குத்தாலம். இங்கிருந்து பிரியும் சாலையில் 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

சித்திரை

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், சித்திரரத வல்லபபெருமாள் திருக் கோவில். மதுரையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் கோவில் இருக்கிறது.

சுவாதி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம் தாத்திரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் சித்துக்காடு என்ற ஊரில் உள்ளது. சென்னை-பூந்தமல்லி சாலையில் தண்டுரை என்ற ஊரில் இருந்து, 8 கிலோமீட்டர் தொலைவில் சித்துக்காடு உள்ளது.

விசாகம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம். முத்துக்குமாரசாமி திருக்கோயில். இந்த ஆலயம் திருமலைக் கோவிலில் உள்ளது. மதுரையில் இருந்து 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலயத்தை அடையலாம்.

அனுஷம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், மகாலட்சுமிபுரீஸ் வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருநின்றியூர் என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கேட்டை

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபடுங்கள். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 13 கிலோ மீட்டர் தூரத்தில் பசுபதிகோயில் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது.

மூலம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, சிங்கீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் இருக்கிறது. பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டரில் மப்பேடு உள்ளது.

பூராடம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கடுவெளி என்ற இடத்தில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கடுவெளி என்ற ஊர்.

உத்திராடம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் பூங்குடி என்ற திருத்தலத்தில் உள்ளது. சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தூரத்தில் ஓக்கூர் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கிலோமீட்டர் சென்றால் பூங்குடி தலத்தை அடையலாம்.

திருவோணம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாற்கடல் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. வேலூரில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் காவேரிப்பாக்கம் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம். ஆற்காடு, வாலாஜாவில் இருந்தும் பஸ்வசதி உள்ளது.

அவிட்டம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபட வேண்டும். இந்த ஆலயம் கொருக்கை என்ற இடத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் இங்கு செல்லலாம்.

சதயம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், அக்னிபுரீஸ்வரர் ஆலயம். இது திருப்புகலூர் என்ற இடத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

பூரட்டாதி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், திருவானேஷ்வர் திருக்கோயிலில் உள்ள இறைவனை வழிபாடு செய்யுங்கள். இந்த ஆலயம் இருப்பது ரங்கநாதபுரம் என்ற ஊர். திருவையாறில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருக்காட்டுப்பள்ளி. இங்கிருந்து அகரப்பேட்டை செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் உள்ளது.

உத்திரட்டாதி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தீயத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள ஆவுடையார் கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவன வாசல் செல்லும் சாலையில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.

ரேவதி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கயிலாயநாதர் ஆலயமாகும். திருச்சியிலிருந்து முசிறி சென்று, அங்கிருந்து 21 கிலோ மீட்டரில் உள்ள தாத்தய்யங்கார் பேட்டை செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ராசிக்கல் பலன்கள்

இராசிக்கல் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

இராசிக்கல் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உண்டு. ஒவ்வொரு அதிபதிக்கும் ஒவ்வொரு ராசிக்கல் உண்டு. ராசிக்கல் அணிவதால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியும் அடைய முடியும் என்பது உண்மையல்ல. ராசிக்கல் அணிந்ததால்...
தலப்பாகட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள் சீரக சம்பா அரிசி (அல்லது) பாஸ்மதி அரிசி – ½ கிலோ மட்டன் கறி – ½ கிலோ பெரிய வெங்காயம் – 3 ( பெரியது...
ராம நவமி விரதம் இருப்பது எப்படி

ஸ்ரீராமநவமி சிறப்புகளும் வழிபடுவதால் உண்டாகும் நன்மைகளும்

ஸ்ரீராமநவமி சிறப்புகள் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி...
முடக்கத்தான் மருத்துவ பயன்கள்

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்

முடக்கத்தான் கீரை முடக்கத்தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. இதன் இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிறத்தில்...
aarkadu makkan beda

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம் வெண்ணெய்  - 1 ஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய்...
மூன்று முடிச்சு போடுவதின் அர்த்தம்

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ?

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்ததாகும். திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் ஏன், எதற்காக செய்கிறோம்...
ஆட்டுக்கால் பாயா குருமா

ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

ஆட்டுக்கால் பாயா ஆட்டுக்கால் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் ஆட்டுகாலை வைத்து செய்யப்படும் பாயா டிபன் வகைகளுக்கு சிறந்த சைடுடிஷ் ஆகும். ஆட்டுகால் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு பார்ப்போம். ஆட்டுக்கால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.