இனிப்பு அப்பம் செய்வது எப்படி

அப்பம்

இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியங்களில் முக்கியமான ஒன்று இனிப்பு அப்பம் ஆகும். இந்த அப்பம் சுவையானது மட்டுமல்லாமல் செய்வதும் மிகவும் எளிதான ஒரு பலகாரம் ஆகும். சுவையான இனிப்பு அப்பம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்

  1. மைதா மாவு – 1 கப்
  2. ஏலக்காய் – சிறிதளவு
  3. அரிசி மாவு – ½ கப்
  4. வெல்லம் – ½ கப்
  5. வாழைப்பழம் – 2
  6. தண்ணீர் – தேவையான அளவு
  7. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  1. முதலில் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதித்து பின் வெல்லம் கரைந்த பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. இரண்டு வாழைப்பழத்தையும் மசித்து வைத்துக் கொள்ளவும்.
  3. வேறு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு , அரிசி மாவு, ஏலக்காய், மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. கரைத்து வைத்துள்ள வெல்லக் கரைசைலை மாவுடன் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  5. மாவு அதிக தண்ணீராகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்க வேண்டும்.
  6. ஒரு வாணலியில் அப்பம் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
  7. எண்ணெய் சூடானதும் குழிக்கரண்டியில் எடுத்து ஒவ்வொரு கரண்டியாக எண்ணெயில் சேர்க்கவும்.
  8. இரண்டு பக்கமும் சிவந்து வெந்த பின் எடுத்தால் சுவையான அப்பம் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சுக்ரனின் யோகம்

மகாவிஷ்ணுவின் காலை மகாலக்ஷ்மி பிடித்து விட காரணம்

மகாவிஷ்ணுவின் காலை மகாலக்ஷ்மி பிடித்து விட காரணம் திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகாலக்ஷ்மி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம். மகாவிஷ்ணுவும்,...
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
கோலம் போடுவதால் உண்டாகும் பயன்கள்

கோலத்தின் பாரம்பரியமும் அதன் சிறப்புகளும்

கோலத்தின் பாரம்பரியமும் அதன் சிறப்புகளும் எந்தவொரு மங்கள நிகழ்வையும் அழகாக்குவது முதலில் அங்கு இடப்படும் கோலம்தான். பண்டிகைகள், திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற எந்த ஒரு விசேஷம் என்றாலும் அவற்றில் முக்கியமாக இடம்பெறுவது...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கும்ப லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் சற்று உயரமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல கவர்ச்சியான, மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். தெய்வ பக்தியும்,...
ஆவாரம் பூ மருத்துவ நன்மைகள்

அற்புத பலன்களை அள்ளி வழங்கும் ஆவாரம் பூ

ஆவாரம் பூ ஆவாரம் உடலுக்கு பலம் அளிக்கும் மற்றும் குளிர்ச்சி தரும். எல்லா வகை இடங்களிலும் வளரும் தன்மையுடையது. இது மஞ்சள் நிறப் பூக்களையுடையது மற்றும் மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல்...
மூட்டு வலிக்கான தீர்வு

மூட்டு வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்

மூட்டு வலி பெரும்பாலானோர் மூட்டு வலி பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலருக்கும் ஏற்படும் பாதிப்பாக அமைந்துள்ளது. மூட்டுகளில் வலி...
மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் குருவை அதிபதியாக கொண்ட மீன லக்னகாரர்கள் அன்பும், கனிவும் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு காதல் கொள்வார்கள். இவர்கள் துடுக்குத்தனம் மிக்கவர்கள்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.