கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள்

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள்

முருகப்பெருமானை வழிபட சிறந்த நாள் என்றால் அது கந்த சஷ்டி நாளாகும். இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருந்தால் அந்த கந்தனே குழந்தையாக பிறப்பார் என்பது நம்பிக்கை.

கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை அந்த வகையில் இந்த ஆண்டு 04.11.2021 தீபாவளி அன்று கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து 6 நாட்கள் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 6 ஆம் நாள் சூரசம்ஹாரம், 7 ஆம் நாள் முருகனுக்கு அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடைபெறும்.

சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

இந்த சஷ்டி விரதம் வீட்டிலும் கோவிலுக்கு சென்றும் இருக்கலாம். முடிந்த வரை முருகன் கோயிலில் இருப்பது விசேஷமானது.

வீட்டில் விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்து முடித்து முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலையத்திற்கு சென்று வரலாம். வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம் கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலைப் படிக்கலாம்.

சஷ்டி விரதம் ஒரு சிலர் ஆறு நாட்கள் விரதம் இருந்து, இந்த கந்தசஷ்டியை அனுஷ்டிப்பார்கள். ஆறு நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள், கந்தசஷ்டி கடைசி தினத்தன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம்.

இந்த விரதம் இருப்பதன் மூலம் முருகனிடம் நாம் வேண்டிய வரம் கிடைக்கும். நீங்கள் அடைய நினைக்கும் அத்தனை செல்வமும் வந்து சேரும். சூரபத்மனை சம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் வெற்றிவாகை சூடிய தினமாக கந்தசஷ்டி அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் முருகனை வழிபட்டால், நாமும் வாழ்வில் வெற்றியைப் பெறலாம்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பிள்ளைப் பேறு உண்டாகும். குழந்தைச் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதங்களில், அதிமுக்கியத்துவம் வாய்ந்தது ‘கந்தசஷ்டிவிரதம்’ ஆகும். கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம் பதினாறு வகையான செல்வங்களையும் பெற முடியும்.

விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

brinjal uses in tamil

கத்திரிக்காய் மருத்துவ குணங்கள் | Brinjal Benefits in Tamil

கத்திரிக்காய் கத்தரிக்காய் செடியின் அறிவியல் பெயர் சொலனும் மெலோங்கெனா ஆகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடி கொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகையாகும். சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற...
வல்லாரை கீரை நன்மைகள்

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரை வல்லாரை கீரை என்பது ஒரு பல்வேறு மருத்துவ மூலிகைப் பயன்பாட்டுடைய கீரை வகைத் தாவரமாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளை உணவாகப் பயன்படுத்துவதால்...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மிதுன லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள், மற்றும் அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்களை செய்வார்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவராகவும், கணக்கில் ஆர்வம் மிக்கவராகவும்...
கேழ்வரகு சேமியா இட்லி

கேழ்வரகு சேமியா இட்லி செய்முறை

கேழ்வரகு சேமியா இட்லி கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற  பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க கேழ்வரகு...
களத்திர தோஷம் பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? களத்திர தோஷத்திற்கான நிவர்த்தி / பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது ஒன்றுடன்...
பிறந்த தேதி பலன்

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும்...
இறால் மிளகு வறுவல்

ஸ்பைசி இறால் மிளகு தொக்கு செய்வது எப்படி

இறால் மிளகு தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1 கப் வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது ) தக்காளி - 2  ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி பூண்டு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.