மதுரை மட்டன் மசாலா
தேவையான பொருட்கள்
- மட்டன் – ½ கிலோ
- வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
- தனியாத்தூள் – 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – தேவையான அளவு
- கொத்தமல்லி இலை – ½ கப்
- புதினா இலை- ¼ கப்
- சோம்பு – 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- காய்ந்த மிளகாய் – 4
- இஞ்சி – 1 துண்டு
- தேங்காய் விழுது – ¼ கப்
- கரம்மசாலா – 1 ஸ்பூன்
செய்முறை
- மட்டனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- இத்துடன் வெங்காயம், தனியாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, புதினா , கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
3.வேகவைத்த மட்டனைச் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
- தண்ணீர் வற்றியவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- பின்னர் உப்பை சரிபார்த்து கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மணக்கும் மதுரை மட்டன் மசாலா தயார்.