இறால் ப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்
- இறால் – ½ கிலோ
- வடித்த சாதம் – 2 கப் ( பாஸ்மதி அரிசி )
- வெங்காயம் – சிறிதளவு ( மெல்லிதாக நறுக்கியது )
- கேரட் – ¼ கப்
- பீன்ஸ் – ¼ கப்
- முட்டை கோஸ் – சிறிதளவு
- குடைமிளகாய் – 1
- வெங்காயத் தாள் – 1 கைப்பிடி
- எலுமிச்சை சாரு – சிறிதளவு
- தக்காளி சாஸ் – ¼ ஸ்பூன்
- சோயா சாஸ் – ¼ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- மிளகு தூள் – ¼ ஸ்பூன்
செய்முறை
- முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
- பின் அதனை எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து 20 – 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- பின்பு 1 வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு, 7 – 8 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதே வாணலியில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து 5 நிமிடத்திற்கு வதக்கவும்.
- காய்கறிகள் பாதி அளவிற்கு வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் தக்காளி சாஸ், மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- பின்பு வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறவும்.
- கடைசியாக பொடியாக நறுக்கிய வெங்காய தாள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான இறால் ப்ரைட் ரைஸ் ரெடி.