செட்டிநாடு சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள்
- சிக்கன் – ½ கிலோ
- தக்காளி – 2
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
- தேங்காய் துருவல் – ½ கப்
- கசகசா – 1 ஸ்பூன்
- சோம்பு – 1 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
- மல்லி தூள் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பட்டை – 1 பெரிய துண்டு
- கிராம்பு – 3
- சீரகம் – ¼ டீஸ்பூன்
- மிளகு – 1 ஸ்பூன்
- கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி
செய்முறை :
- முதலில் சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
- சிக்கன் கிரேவி செய்ய ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும். அதற்க்கு ஒரு மிக்ஸி ஜாரில் ½ கப் தேங்காய் துருவல், சோம்பு, சீரகம்,மிளகு, கசகசா, முந்திரி சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சிறிதளவு சோம்பு போட்டு தாளிக்கவும்.
- தாளித்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு கரையும் அளவிற்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
- இஞ்சி பூண்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- இஞ்சி பூண்டு வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.
- சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து பிரட்டி விடவும்.
- மசாலா சிக்கனோடு நன்றாக கலந்து வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.
- இப்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி தயார்.
- இறுதியாக கொஞ்சம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சுவையாக இருக்கும்.