கீழாநெல்லி மருத்துவ குணங்கள்

கீழாநெல்லி

கீழாநெல்லி என்பது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகை செடியாகும். இந்த செடி முழுவதும் மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். இது வெப்பமண்டல பகுதிகளில் வளரும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்தது. கீழாநெல்லி செடி சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும். இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய் நெல்லி என அழைக்கபட்டது. பின்னர் பேச்சு வழக்கில் கீழாநெல்லி என அழைக்கபடுகிறது.

கீழாநெல்லி மருத்துவ நன்மைகள்

காலம் காலமாக தமிழர்கள் மஞ்சள் காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றும் கீழாநெல்லி பல்வேறு நோய்கள் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கீழாநெல்லி மிகுந்த குளிர்ச்சி தன்மை கொண்டதாகும். இது இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்புச் சுவைகளைக் கொண்டது. கபத்தை தணித்து வாதத்தை அதிகரிக்கும். இதனை பச்சையாகக் கூட சாப்பிடலாம். ஆனால் லேசான கசப்பு சுவை கொண்டது.

கீழாநெல்லியின் வேறு பெயர்கள்

கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி, இளஞ்சியம், அவகதவாய், கீழ்க்காய், காதமாதாநிதி, மாலறுது, மாலினி, வித்துவேசரம், பூதாத்திரி, பெருவிரியகா, காமாலை நிவர்த்தி போன்ற பல பெயர்களால் கீழாநெல்லி அழைக்கபடுகிறது.

கீழாநெல்லியின் மருத்துவப் பயன்கள்

வழுக்கை மறையும்

சிலருக்கு இளம் வயதிலேயே முடி கொட்டி தலையில் வழுக்கை விழும். அப்படியானவர்கள் வழுக்கை தலையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடிகள் உருவாகும்.

தோல் நோய்களை குணமாக்கும்

கீழாநெல்லி இலை சிறிது எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து மையாக அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

மனஅழுத்தத்தை குறைக்கும்

கீழாநெல்லிவேர், நல்லெண்ணைய், கருஞ்சீரகம், சீரகம் இவை தலா 10 கிராம் அளவு எடுத்து பசும்பால் விட்டு அரைத்து கலக்கிக் காய்ச்சி வடிகட்டி தலைக்கு குளிக்கலாம். இதனால் உச்சி குளிர்ந்து மன அழுத்தத்தை குறைக்கும்.

பல வகை நோய்களை தீர்க்கும்

மஞ்சள் காமாலை, சீறுநீரக நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிறு சம்பந்தமான நோய்கள், காய்ச்சல், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், புரை, வீக்கம், ரத்தம் வடிதல் போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.

சூட்டை குறைக்கும்

கீழாநெல்லியை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை என இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலின் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.

நீர் கடுப்பை சரியாக்கும்

நாள்பட்ட நீர் கடுப்பு நோயினால் அவதிப்படுபவர்கள் கீழா நெல்லி இலையுடன் கற்கண்டு சேர்த்து மைப் போல அரைத்து 1 வாரத்திற்கு இரண்டு வேளைகள் வீதம் சாப்பிட்டு வந்தால் உடனே சரியாகி விடும்.

கண் பார்வை தெளிவு பெறும்

கீழாநெல்லி, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு எடுத்து அரைத்து சிறிது மோரில் கலக்கி 45 நாள்கள் உட்கொண்டால் மாலைக்கண், பார்வை மங்கல் பிரச்சனை, வெள்ளெழுத்து பிரச்சனைகள் தீரும்.

பல் கூச்சத்தை போக்கும்

எதை சாப்பிட்டாலும் பல் கூச்சம் பிரச்சனை சிலருக்கு இருக்கும். அப்படியானவர்கள் கீழா நெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிட நேரம் மென்றால் உடனே பல் கூச்சம் போய்விடும்.

வெள்ளைபடுதல் குணமாகும்

கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் உட்கொண்டால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தாமதமாக வருதல், உதிரச்சிக்கல் போன்றவை தீரும்.

சீதபேதி குணமாகும்

கீழாநெல்லி இலையுடன் மாதுளம்பழம், நாவல் கொழுந்து இலை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை குணமாகும்.

கீழாநெல்லி வேர் பயன்கள்

உயிரணுக்களை அதிகரிக்கும்

கீழாநெல்லி இலையுடன், ஓரிதழ் தாமரையை சம அளவாக சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு அதிகாலையில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக்கள் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை, ரத்த சோகை குணமாகும். மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஈறு நோய்கள் குணமாகும்

கீழாநெல்லி இலையை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி ஈறு நோய்கள் குணமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....
சப்தமி திதி பலன்கள்

சப்தமி திதி பலன்கள், சப்தமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

சப்தமி திதி சப்தம் என்றால் ஏழு என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஏழாவது நாள் சப்தமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சப்தமியையை சுக்கில பட்ச சப்தமி என்றும், பௌர்ணமிக்கு...
கனவு பலன் திருமணம்

பொதுவான கனவு பலன்கள்

பொதுவான கனவு பலன்கள் நாம் தூக்கத்தில் காணும் எல்லா கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் நமக்கு வரும் கனவுகள் நம் நினைவுகளின் கற்பனை வடிவம் என கூறுகின்றனர். அதாவது மனிதர்களின் ஆழ்...
ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #6

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும், அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கோள்கள் இருக்கும் நிலையை வைத்து நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூசம் நட்சத்திரத்தின் இராசி : கடகம் பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி பூசம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன் பூசம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை -: சூரியன் பூசம் நட்சத்திரத்தின் பரிகார...
இறால் முட்டை மசாலா

பட்டர் இறால் முட்டை மசாலா

பட்டர் இறால் முட்டை மசாலா தேவையான பொருட்கள் பட்டர் - 1 கப் இறால் – ½ கிலோ முட்டை – 4 ( வேக வைத்தது ) வெங்காயம் -  2 (...
கார்த்திகை தீபம் விளகேற்றும் முறை

கார்த்திகை தீபம் விளக்கேற்றும் முறை மற்றும் பலன்கள்

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் நம் வீட்டில் தீபம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.