ஈரல் மிளகு வறுவல்
தேவையான பொருட்கள்
- ஈரல் – ½ கிலோ
- பட்டை – 1
- கிராம்பு – 2
- வெங்காயம் – 1 கப் ( பொடியாக நறுக்கியது )
- பச்சை மிளகாய் – 1 ( பொடியாக நறுக்கியது )
- இஞ்சி – 1 துண்டு ( பொடியாக நறுக்கியது )
- பூண்டு – 10 பல் ( பொடியாக நறுக்கியது )
- கரம் மசாலா – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
- மிளகு தூள் – 2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஈரலுடன் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- சுத்தம் செய்த ஈரலுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்போது ஒரு கடாயில் 2 முதல் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் 1 துண்டு பட்டை, 2 கிராம்பு சேர்த்துக் கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை, மிளகாய் மூன்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
- வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் பொன்னிறம் ஆனதும் வேக வைத்த ஈரலை சேர்த்துக் கொள்ளவும்.
- ஈரலை சேர்த்து 2 நிமிடத்திற்கு நன்கு வதக்கி கொள்ளவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா ஆகிவற்றை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- ஈரலை வேக வைக்கும் போது நாம் உப்பு சேர்த்திருப்பதால் உப்பின் அளவை சரிபார்த்து சேர்த்துக் கொள்ளவும்.
- உப்பு சேர்த்த பின் நன்கு ஒரு முறை கிளறி மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
- 5 நிமிடம் ஆன பிறகு மூடியை திறந்து நன்கு கிளறி சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான ஈரல் மிளகு வறுவல் தயார்.