ஆட்டுக்கால் சூப்
தேவையான பொருட்கள்
- ஆட்டுக்கால் – 4
- தனியா தூள் – 2 ஸ்பூன்
- மிளகு தூள் – 2 ஸ்பூன்
- சீரகத் தூள் – 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
- பூண்டு பல்(தோலுடன்) – 10
- இஞ்சி – 1 துண்டு
- பச்சை மிளாகாய் – 1
- சின்ன வெங்காயம் 100 கிராம்
- தக்காளி – 1
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
- முதலில் ஆட்டுக்கால்களை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- சுத்தம் செய்த ஆட்டுக்கால்களை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். ஆட்டுக்காலுடன் 100 கிராம் சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
- இஞ்சி, பூண்டு இரண்டையும் தட்டி சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை அரைத்து சேர்க்காமல் தட்டி சேர்ப்பதால் சூப்பின் சுவை அதிகரிக்கும்.
- பின்னர் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.
- தனியா தூள், மிளகு தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் , ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
- இவை அனைத்தையும் சேர்த்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைக்கவும்.
- விசில் அடங்கியவுடன் குக்கரை திறக்கவும்.
- இப்போது ஆட்டுக்கால் சூப் தாளிப்பதற்கு ஒரு சின்ன கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு கடுகு , சிறிதளவு சீரகம், 2 சின்ன வெங்காயத்தை நன்றாக இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
- சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
- தாளித்தவற்றை சூப்பில் சேர்த்துக் கொள்ளவும்.
- கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்.