நீரில் மூழ்கியவரை காப்பாற்ற செய்ய வேண்டிய முதலுதவிகள்

நீரில் மூழ்கியவருக்கான முதலுதவிகள்

நீச்சல் தெரியாதவர்கள் ஆர்வமிகுதியில் குளம், ஏரி, ஆறு அல்லது கடலில் குளிக்கும் போதும், படகில் செல்லும் போதும், நீச்சல் பயிற்சியின் போதும், தண்ணீர் விளையாட்டுகளின் போதும், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிகளுக்கு செல்லும்போது தண்ணீரில் முழ்கி பதட்டத்தில் வேகமாக சுவாசித்து, தண்ணீரைக் குடித்து விடுவார்கள். இதனால் நுரையீரலுக்குள் தண்ணீர் நுழைந்துவிடும். இதனால் பிராணவாயு இருக்க வேண்டிய இடத்தில் தண்ணீர் இருக்கும், இதனால் மூளைக்கு தேவையான பிராண வாயு கிடைக்காது.

நீர் விபத்துகளுக்கான முதலுதவிகள்

இதன் காரணமாக அந்த நபரின் மூளைக்குப் பாதிப்பு ஏற்பட்டு, மயக்கம் உண்டாகி, தண்ணீரில் மூழ்கிவிடுவார். இதனால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிவிடும். இதனால் அவர் உயிர் இழப்பதற்கு முன்பு சரியான முதலுதவி அளிக்க வேண்டும். இந்நிலையில் நீரில் மூழ்கியவருக்கான  முதலுதவிகள் செய்து உயிர் போகும் நிலையில் உள்ள நபரை எவ்வாறு காப்பாற்றுவது என வாருங்கள் பார்ப்போம்.

நீரில் முழ்கியவரை காப்பாற்றும் வழிமுறைகள்

1. தண்ணீரில் மூழ்கியவரைக் காப்பாற்ற அணுகுதல், கையால் இழுத்தல், எறிதல், கருவி கொண்டு இழுத்தல், அருகில் செல்லுதல் போன்ற ஐந்து முதலுதவி முறைகளை பின்பற்ற வேண்டும்.

2. நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றவும், முதலுதவி செய்யவும் முன்வர வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் அவசரகதியில் இதில் ஈடுபடக் கூடாது.

3. பாதிக்கப்பட்ட நபர் நல்ல நினைவோடு இருந்து தண்ணீரில் தத்தளிக்கிறார் எனில் அவருக்கு கம்பு, கயிறு, நீளமான குச்சி, மரக்கிளை, வேஷ்டி, போர்வை, டவல் போன்றவற்றில் எதாவது ஒன்றை நீட்டி, அதைப் அவர் பிடித்துக்கொள்ள செய்து, மெதுவாக அதை உங்கள் பக்கமாக இழுங்கள். இதை நீங்கள் செய்யும்போது கவனமாக இருக்கவும், ஏனெனில் தண்ணீரில் தத்தளிக்கும் நபர், பதற்றத்தில் வேகமாக இழுத்து உங்களைத் தண்ணீருக்குள் இழுக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனால் கவனமாக இருக்கவும்.

4. பாதிக்கப்பட்ட நபர் தண்ணீரில் எட்ட முடியாத தூரத்தில் இருக்கிறார் எனில், தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருட்களான கார் டயர், காற்றடைத்த பெரிய பந்து, மர மிதவைகள், ஃபோம் மெத்தைகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை அவரை நோக்கி சரியாக வீச வேண்டும். அதைப் பிடித்து கொண்டு அவர் கரைக்கு வந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.

5. ஒருவேளை பாதிக்கபட்ட நபர் தண்ணீரில் வெகு தொலைவில் இருந்தால், நீங்கள் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள், தண்ணீரில் குதித்து அவரைக் காப்பாற்ற கவனத்துடன் முயற்சி செய்யலாம்.

6. காப்பற்றப்பட்ட நபர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தால் அவரின் முதலில் சுவாச ஓட்டம் மற்றும் நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும். மூச்சு விடவில்லை என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கலாம். பாதிக்கபட்ட நபரை மல்லாந்த நிலையில் படுக்கவைத்து அவரின் வாயோடு நமது வாயைப் வைத்து பலமாக ஊத வேண்டும். இப்படிச் செய்வதால், நம் வாய் வழியாக உந்தித் தள்ளப்படும் காற்றானது பாதிக்கபட்டவரின் நபரின் மூச்சுக் குழல் அடைப்பை சட்டென நீக்கி, இயல்பாக மூச்சுவிட உதவும்.

7. பாதிக்கப்பட்ட நபரின் இதயம் இயங்காமல் இருந்தால், அவரிடம் நாடித் துடிப்பு இருக்காது. உடனடியாகக் அவரின் மார்பின் நடுவில் இரண்டு விரல்களை (ஆட்காட்டி விரல், நடு விரல்) ஒன்று சேர்த்து நன்றாக ஊன்றி அழுத்தும்போது சட்டென இதயம் துடிக்க ஆரம்பிப்பதோடு, நுரையீரலில் தேங்கி நிற்கும் தண்ணீர், வாய் மற்றும் மூக்கு வழியே வெளியேறும்.

நீரில் தத்தளிபவருக்கான முதலுதவிகள்

8. நீரில் மூழ்கியவரை காப்பாற்றும்போது, பாதிக்கப்பட்டவரது நபரின் தலையை தண்ணீரி மட்டத்திற்கு சிறிது மேலே இருக்குமாறு உயர்த்திப் பிடித்துக்கொண்டு, சுவாச ஓட்டம் இருக்கிறதா என்று சோதிக்கலாம். ஒருவேளை சுவாசம் இல்லை என்றால், தண்ணீரில் இருக்கும் அந்த நிலையிலேயே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கலாம்.

9. தண்ணீருக்குள் மூழ்கியவருக்கு மூச்சும், நாடித் மற்றும் இதய துடிப்பு இல்லை எனில், அவர் இறந்துவிட்டார் என்று முடிவு செய்ய கூடாது. மூச்சுத் விடுவதில் பிரச்சனை , இதயம் செயல்படாமல் இருப்பது இரண்டுமே தற்காலிகமானவை. எனவே, பதற்றபடாமல் முறையான முதல் உதவி செய்து, பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றி விடலாம். எனவே, தண்ணீரில் விழுந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தால்கூட, பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக தேவையான முதல் உதவிகள் செய்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று மேற்சிகிச்சை அளிக்க வேண்டும்.

10. எந்த காரணத்தை கொண்டும் பாதிக்கபட்ட நபரின் வயிற்றை அழுத்தக் கூடாது. திரைப்படங்களில் தண்ணீரில் மூழ்கியவரைக் கரைக்கு கொண்டுவந்து சேர்த்ததும் அவரது வயிற்றை அழுத்தி, தண்ணீரை வெளியேற்றுவதாகக் காட்டுவார்கள். இது முழுக்க முழுக்கத் தவறான முறை. இதை செய்யகூடாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பப்பாளி பழ அல்வா செய்வது எப்படி

பப்பாளி பழ அல்வா செய்முறை

பப்பாளி பழ அல்வா தேவையானப் பொருட்கள்: பப்பாளி பழ துண்டுகள்  -  2 கப் சர்க்கரை  -  1 கப் சோள மாவு - 2 ஸ்பூன் நெய்  -  4 தேவையான...
how to make prawn 65 recipe

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

இறால் 65 தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ சோளமாவு - 1 ஸ்பூன் மைதா மாவு - 1 ஸ்பூன் முட்டை – 1 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி,...
மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல்...
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மற்றும் கன்னி உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திரம் முதல் பாதத்தின் இராசி மற்றும் அதிபதி - சிம்மம் : சூரியன் உத்திரம் இரண்டாம்,...
கருவளையம் வர காரணம் என்ன

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் 

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் நம் முகத்திற்கு அழகை கொடுப்பதே நம் கண்கள் தான். நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும் கருவளையம் தான். அதிக நேரம் வெயிலில் அலைவதாலும்,...
உடல் எடையை குறைக்கும் தேநீர்

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ உடல் எடை அதிகரிப்பு இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் சோர்வு, மந்த நிலை, இரத்த அழுத்த்தம், சர்க்கரை...
ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசி பொது பலன்கள் – ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசி குணங்கள் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவர். ரிஷப ராசியில் கிருத்திகை 2, 3, 4 ஆம் பாதங்களும், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்களும் அடங்கியுள்ளன. ராசிகளில், ரிஷப ராசி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.