பொதுவான கனவு பலன்கள்
நாம் தூக்கத்தில் காணும் எல்லா கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் நமக்கு வரும் கனவுகள் நம் நினைவுகளின் கற்பனை வடிவம் என கூறுகின்றனர். அதாவது மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே தூக்கத்தில் கனவுகளாக வெளிபடுகின்றன என கூறுவர். கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதே வருகின்றன. அந்த வகையில் நமக்கு தோன்றும் பொதுவான கனவு பலன்கள் என்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்,
1. நாட்டின் மிக பெரிய பதவியில் உள்ள பிரதமர், ஜனாதிபதி, மற்றும் பெரிய பெரிய பதவியில் உள்ளவர்களுடன் அறிமுகம் ஏற்படுவது போல கனவு வந்தால், சமூகத்தில் மிக பெரிய அந்தஸ்தும், மதிப்பும் ஏற்படும் என அர்த்தம்.
2. திருமணமாகாத கன்னிப்பெண் பெரிய பதவியில் உள்ளவர்களுடன் பழகுவது போல கனவு கண்டால், அவளை மணம் முடிக்க வரப்போகும் ஆண், அந்த பெண்ணின் குடும்பத்தைவிட பலமடங்கு வசதியுடன் இருப்பான் என்று அர்த்தம்.
3. அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் பழகுவது போல கனவு வந்தால், நண்பர்கள் மூலமாக பொருள் உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தம்.
4. தேவலோகப் பெண்கள் கனவில் வந்தால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் என்று பொருள்.
5. தேவலோகப் பெண்கள் மணமாகாத பெண்ணின் கனவில் வந்தால், கூடிய விரைவில் திருமணம் நடைபெறும். திருமணமான பெண் கண்டால், பொருள் வரவு உண்டு என்று அர்த்தம்.
6. அழகில்லாத பெண்னை மணமாகாத ஓர் ஆண் கனவில் கண்டால், அவனுக்கு மிகவும் அழகான பெண் மனைவியாக வருவாள் என்று அர்த்தம்.
7. நூதனமான பொருட்கள், அதிசயமான மனிதர் போன்றோரை கனவில் கண்டால் தீமைகள் ஏற்படலாம் என்பதற்கான அறிகுறியாகும்.
8. அடிதடி, சண்டை சச்சரவுகளில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால், கனவு கண்டவரின் வாழ்க்கையானது அமைதியாக எல்லோருடன் சுமுக உறவு கொண்டதாக இருக்கும் என்று அர்த்தம்.
9. சண்டையில் பிறர் நம்மை அடிப்பது போன்று கனவு வந்தால், கனவு கண்டவருக்கு விரோதிகளே இருக்க மாட்டார்களாம்.
10. சமையல் செய்வது போல் கனவு வந்தால், அவமானம் ஏற்படும் என்று அர்த்தம்.
11. யாரையாவது நீங்கள் அடிப்பது போல கனவு கண்டால், நண்பர்களால் போற்றி புகழப்படும் நிலை உருவாகும். புதிய நண்பர்கள் உருவாவார்கள், புகழ் பெருகும் என்று அர்த்தம்.
12. காயமடைந்தது போல கனவு கண்டால், பொருள் மேன்மை ஏற்படும் என்று அர்த்தம்.
13. ஆயுதங்களால் அடிபட்டு காயமடைவது போல கனவு கண்டால் நல்லதல்ல, வீண் பழி வந்து சேரும் என்று அர்த்தம்.
14. அழுவது போல கனவு வந்தால், வாழ்க்கையில் புதிய இடையூறுகள் ஏற்படலாம் என்று அர்த்தம்.
15. அபாயமும், தொல்லைகளும் ஏற்படுவது போல கனவு வந்தால், வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், நிம்மதியாகவும் இருக்கும் என்று அர்த்தம்.
16. யாரவது அபாயத்தில் மாட்டிக் கொண்டிருப்பது போல கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவு ஏற்படக்கூடும் என்று பொருள்.
17. ஊனமடைந்தது போல கனவு வந்தால், சோகமான செய்திகள் வந்து சேரும் என்று அர்த்தம்.
18. சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
19. உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு வந்தால் பணம், பாராட்டு குவியும் என்று அர்த்தம்.
20. திருமண கோலம் கனவில் வந்தால், சமூகத்தில் நன்மதிப்பு ஏற்படும் என்று பொருள்.
21. யாரையாவது முத்தமிடுவது போல் கனவு வந்தால், செல்வாக்கு சரியும் என்று அர்த்தம்.
22. ஆசிரியர், குரு போன்றோர் கனவில் வந்தால் கனவு கண்டவர் வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் என்று அர்த்தம்.
23. வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் ஆசிர்வாதம் செய்வது போல கனவு கண்டால், தொழிலில் உயர்வும், பொருள் சேர்க்கையும் உண்டாகும் என்று அர்த்தம்.
24. நீங்கள் ஒல்லியாக இருப்பது போல கனவு கண்டால், உங்கள் குடும்பத்தின் நிலை மேலோங்கும் என்று அர்த்தம்.
25. இரும்பு கனவில் வந்தால் மனோவலிமை அதிகரிக்கும் என்று அர்த்தம்.
26. அலுவலகத்தில் மும்முரமாக வேலை செய்வது போல கனவு கண்டால் உங்களுக்கு நல்லகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.
27. வேலையிலிருந்து நீக்கப்பட்டது போல கனவு வந்தால் செய்யும் வேலையில் நிர்வாகத் தவறுகள் ஏற்பட்டு, மேலிட கோபத்தை சம்பாதிக்க நேரிடலாம் என்று அர்த்தம்.
28. முட்டை சாப்பிடுவது போல் கனவு வந்தால், வறுமை ஏற்படும் என்று அர்த்தம்.
29. நோய் வந்தது போல கனவு கண்டால், நண்பர்கள் ஏமாற்றுவார்கள் என்று அர்த்தம்.
30. சொந்த தொழில் செய்பவர்கள், அதில் பிரச்சனைகள் ஏற்படுவது போல கனவு கண்டால், தொழிலில் புதிய சிக்கல்கள் உருவாகலாம் என்று அர்த்தம்.
31. விவசாயம் செய்வது போல கனவு வந்தால், கனவு கண்டவரின் வாழ்க்கை வளமாக இருக்கும் என்று அர்த்தம்.
32. கோவில் தேரோட்டம் கனவில் வந்தால், உறவினரின் மரணச் செய்தி வரலாம் என்று பொருள்.
33. தனியாக சாப்பிடுவது போல கனவு வந்தால் தொழிலில் நஷ்டங்கள் ஏற்படலாம் என்று அர்த்தம்.
34. தற்கொலை செய்வது போல கனவு வந்தால், ஆபத்துகள் விலகி, நன்மை பிறக்கும் என்று அர்த்தம்.
35. விருந்து சாப்பிடுவது போல கனவு கண்டால், உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும் என்று அர்த்தம்.
36. நண்பன் இறந்தது போல கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும் என்று அர்த்தம்.
37. திருமணம் ஆகாதவர்கள் விருந்து சாப்பிடுவது போல கனவு வந்தால், வெகு விரைவில் திருமணம் நடைபெறும் என்று அர்த்தம்.
38. திருமணம் ஆனவர்கள், விருந்து சாப்பிடுவது போல கனவு வந்தால், கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்று அர்த்தம்.
39. நீர் ஊற்று கனவில் வந்தால், வாழ்க்கையில் அவ்வளவு எளிதாக துன்பம் ஏற்படாது என்று பொருள்.
40. எதிரிகள் கனவில் வந்தால், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொருள்.
41. கனவில் எலும்பைக் கண்டால் மிகவும் நல்லது.
42. மனிதர்களின் எலும்பை கனவில் கண்டால், முன்னோர்கள் சொத்து அவருக்கு கிடைக்கும் என்று அர்த்தம்.
43. பேனா கனவில் வந்தால், கடிதம் வாயிலாக பொருள் வரவு ஏற்படும் என்று பொருள்.
44. எழுதுவது போல கனவு கண்டால், நல்ல செய்திகள் தேடி வரும் என்று அர்த்தம்.
45. மாமிசம் சாப்பிடுவது போல கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும் என்று அர்த்தம். 46. எண்ணெயை தேய்த்து குளிப்பது போல கனவு கண்டால் கனவு காண்பவர் விரைவில் நோயால் பாதிக்கக்பட போகிறார் என்று அர்த்தம்.
47. ஏழையாகி விட்டது போல கனவு வந்தால், எதிர்பாராத வகையில் அவருக்கு செல்வம் வந்து சேரும். எல்லா வகையிலும் முன்னேறி உயர்ந்த நிலையை அடைவார்கள் என்று அர்த்தம்.
48. ஏமாற்றப்பட்டது போல் கனவு வந்தால், தீமை ஏற்பட வாய்ப்பு உண்டு என்று அர்த்தம்.