பொடுகை விரட்ட எளிய டிப்ஸ்
தலையில் உருவாகும் பூஞ்சைத் தொற்று மற்றும் வறட்சி காரணமாக பொடுகு ஏற்படுகிறது. இது தலையில் அரிப்பு, முகத்தில் பருக்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. எண்ணெய் வடியும் சருமம், வறண்ட சருமம், சுத்தமில்லாத தலைமுடி, தலைக்கு பயன்படுத்தும் தரம் குறைந்த பராமரிப்புப் பொருட்கள், மன இறுக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பல காரணங்களால் பொடுகு ஏற்படும். இந்தப் பிரச்சினையை தீர்க்கவும், கூந்தலுக்கு ஊட்டம் கொடுக்கவும் ‘ஹேர் மாஸ்க்’ பயன்படுகிறது.
பொடுகு பிரச்சனையை சரி செய்து தலை முடி நன்கு வளர சில எளிய பொருட்களை கொண்டு ஹேர் மாஸ்க் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
ஹேர் மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள் :
- செம்பருத்தி பூ – 4 முதல் 5
- செம்பருத்தி இலை – சிறிதளவு
- ஊற வைத்த வெந்தயம் – சிறிதளவு
- நெல்லிக்காய் – 2 ( கொட்டை நீக்கியது )
- எலுமிச்சை சாறு – சிறிதளவு
- தயிர் – 2 முதல் 3 ஸ்பூன்
- வேப்பிலை – சிறிதளவு
- மருதாணி இலை – சிறிதளவு
பயன்படுத்தும் முறை
- ஹேர் மாஸ்க் போடுவதற்கு முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து கொள்ளவும்.
- பின்னர் ஒரு மிக்சி ஜாரில் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, வெந்தயம். நெல்லிக்காய், எலுமிச்சை சாறு, தயிர், வேப்பிலை, மருதாணி இவை அனைத்தயும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதை தலை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
- நன்கு ஊறிய பின் தலையை ஷாம்பூ அல்லது சீயக்காய் கொண்டு நன்கு அலசவும்.
- இந்த ஹேர் மாஸ்க்கை மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து வந்தால் தலை முடி உதிர்வு, பொடுகு பிரச்சனையை நின்று முடி நன்கு வளரும்.