குபேரனை எப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும்?

குபேரனை எப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வத்தின் அதிபதியாக மகாலட்சுமி தேவியையே குறிப்பிடுகிறோம். செல்வத்தை வேண்டி மகாலட்சுமியை வணங்கும் போது அவருடைய பரிபூரண அருளை பெற்ற குபேரனையும் சேர்த்து வழிபடுவதால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

லக்ஷ்மி குபேர வழிபாடுபொன், பொருள் என அனைத்து வகையான செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய குபேர பகவானுக்கு உகந்த கிழமை வியாழக்கிழமை ஆகும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கும், சுக்கிரனுக்கும் உரிய நாள் என்பதை போன்று, வியாழக்கிழமை குபேரனை வழிபடுவதற்குரிய நாளாகும்.

வியாழக்கிழமையன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து, வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். நிலைவாசலில் சந்தனம், மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதற்கு பிறகு வீட்டின் பூஜையறையில் குபேரர் படத்தை வைத்து, தாமரை மலர், சங்கு ஆகியவற்றை இருபுறமும் வைத்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளதால் குபேர பூஜையின் பொழுது கட்டாயம் நெல்லிக்கனியை வைத்து வழிபட வேண்டும். அவலுடன் சிறிதளவு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

வியாழக்கிழமை அன்று குபேர விளக்கு (அல்லது அகல் விளக்கு) மற்றும் மனை அல்லது தட்டிற்கு மஞ்சள், குங்குமத்தை ஒற்றைப்படையில் வைத்து அலங்கரித்து கொள்ள வேண்டும். குபேர விளக்கு வைக்கும் மனை அல்லது தட்டில் பச்சரிசியை பரப்பி, அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து, பிறகு குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குபேரருக்கு உகந்த பச்சை நிற திரி கொண்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

லக்ஷ்மிகுபேற மந்திரம்பச்சை நிற திரி இல்லையெனில் பஞ்சு திரியையும் பயன்படுத்தலாம். குபேரருக்கு உகந்த வடக்கு திசை நோக்கி விளக்கை ஏற்ற வேண்டும். குபேர விளக்கில் ஐந்து கற்கண்டு சேர்த்து விளக்கை சுற்றி வாசனை மலர்கள் வைக்க வேண்டும். கற்கண்டு சேர்ப்பது பணவரவை அதிகரிக்க செய்யும்.

வடக்கு நோக்கி நிலைவாசலிலும் ஒரு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். குபேரனை வீட்டின் வாசலில் வைத்து பூஜித்தால், நமது செல்வத்திற்கு பாதுகாப்பும், செழிப்பும் உண்டாகும். குபேர மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டு விளக்கு ஏற்றுவது சிறப்பானதாகும்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் வீட்டு நிலை வாசற்படியில் இவ்வாறு வடக்கு திசை நோக்கி குபேர விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும், தொழில் வளர்ச்சி, லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நோய் நொடிகள் அகலும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அழகான பாதங்கள்

உங்கள் பாதங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.

பாதங்கள் நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதங்களின் அழகும் முக்கியம் தான். ஆனால் பெண்கள் தங்கள் முகம், தலைமுடி,...
சிக்கன் கிரேவி

ஹோட்டல் சுவையில் தக்காளி சிக்கன் கிரேவி

தக்காளி சிக்கன் கிரேவி இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடக்கூடிய ருசியான தக்காளி சிக்கன் கிரேவி சுலபமாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ வெங்காயம்...
நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி

பித்தத்தை தணிக்கும் நெல்லிக்காய் துவையல்

நெல்லிக்காய் துவையல் தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் – தேவையான அளவு தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயத்தூள் – ¼...
ராம நவமி விரதம் இருப்பது எப்படி

ஸ்ரீராமநவமி சிறப்புகளும் வழிபடுவதால் உண்டாகும் நன்மைகளும்

ஸ்ரீராமநவமி சிறப்புகள் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி...
பழங்கள்

கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

கருவுற்றிருக்கும் பெண்களின் உணவு முறைகள்  ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கருவுறுதலை வேகமாக்கும். ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவுகள் பெண்களின் கருமுட்டையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கருவுருதலுக்கு ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இளந்தம்பதியர்...
4ம் எண்ணின் குணநலன்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 4ம் எண் ராகு பகவானுக்குரிய எண்ணாகும். இந்த எண் எங்கும், எதையும் பிரம்மாண்டமாகவும், பெரிதுப்படுத்தி எண்ணக்கூடிய மாபெரும் ஆற்றல் கொண்ட எண்ணாகும். 4, 13, 22, 31 ஆகிய...
உளுந்தங்களி

உடலை உறுதியாக்கும் உளுந்தங்களி

உளுந்தங்களி உளுந்தங்களி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டிய நார்ச்சத்து அதிகம் உள்ள ஒரு சத்தான உணவாகும். இதில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கொழுப்பு, வைட்டமின் B போன்ற சத்துக்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.