உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்  

சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல், இடை இடையே தண்ணீர் அருந்தாமல், அப்படியே விழுங்காமல் மெல்ல மென்று பொறுமையாக சாப்பிட்டால் வாழ்க்கையின் ஆயுளை நீட்டிக்கலாம் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். அந்த வகையில் நாம் உணவு சாப்பிடும் பொழுது செய்யக்கூடாத தவறுகள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும் சமையல் என்பது ஒரு கலை என்பார்கள். சமைப்பது மட்டும் அல்ல சமைத்ததை பரிமாறுவதும் ஒரு கலை தான். அன்பாகவும், அக்கறையாகவும் பரிமாறும் போது சாப்பிடுபவர்களின் வயிறு மட்டும் அல்ல மனதும் சேர்ந்து நிறைகிறது.

சாப்பிடுபவர்கள் மட்டுமல்லாமல், அந்த உணவைப் பரிமாறுபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். உணவு பரிமாறுபவர்கள் முதலில் சாதத்தை சிறிதளவும் சிந்தாமல் பரிமாற வேண்டும். சாதம் கீழே சிந்தினால் வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடும் என்கிறது சாஸ்திரங்கள்.

உண்ணும் உணவு தெய்வத்திற்கு நிகரானது. அதனால் தான் சாதத்தை நாம் அன்னபூரணி என்கிறோம். எனவே தெரியாமல் கூட அன்னத்தைக் கீழே சிந்தக்கூடாது. அன்னத்தை கீழே சிந்தினால் தோஷம் ஏற்படும், இதனால் வறுமை தாண்டவம் ஆட ஆரம்பிக்கும். மற்றவர்களிடன் கையேந்தும் நிலை ஏற்படும் என்பதால் தான் உணவு விஷயத்தில் நிறையவே கவனம் செலுத்த வேண்டும். அன்னத்தை மட்டுமல்லாமல் சாப்பாடு பரிமாறும் பொழுது உப்பு, தயிர், ஊறுகாய் போன்றவற்றையும் கீழே தெரியாமல் கூட சிந்த விடக் கூடாது.

உணவை வீணாக்கக் கூடாது உப்பு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. தயிர் கோமாதா கொடுக்கும் ஒரு அற்புதமான அமிர்தமாகும்.  குபேரனுக்கு உகந்த ஊறுகாயை கீழே கொட்டினால் பணக் கஷ்டம் வரும். இப்படியான பொருட்களை கீழே சிந்தாமல்   பக்குவமாக பரிமாறப்பட வேண்டும். பரிமாறுபவர் மட்டுமல்ல, அதை சாப்பிடுபவர்களும் தட்டில் வைத்து ஒழுங்காக சாப்பிட வேண்டும். தட்டை சுற்றி இவற்றை சிந்துவது என்பது கூடாது. சிலருடைய தட்டை சுற்றி பார்த்தால் சாத பருக்கைகளும், மற்ற சில உணவுப் பொருட்களும் சிந்திக் கிடக்கும். இது போல சிந்திக் கொண்டே சாப்பிடுபவர்களுக்கு கையில் நிச்சயம் பணம் என்பது தங்கவே செய்யாது.

எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது வந்த வழியே ஓடிக் கொண்டே இருக்கும். எனவே சிந்தாமல், சிதறாமல் சாப்பிட்டுப் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையிலும் பணமானது சிந்தாமல், சிதறாமல் வந்து கொண்டே இருக்கும் என்கிறது ஆன்மீகம்.

அரிசி, உப்பு, ஊறுகாய், தயிர் மட்டுமல்லாமல் பொதுவாகவே எந்த ஒரு உணவுப் பொருட்களையும் கீழே சிந்தக் கூடாது. குறிப்பாக தண்ணீரை அருந்தும் பொழுது கீழே சிந்திக் கொண்டே குடிக்கக் கூடாது. தண்ணீர் கீழே சிந்தினால் கடன் பிரச்சனை ஏற்படும். சாப்பிடும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதும் இதற்காகத் தான். நிதானமாக சாப்பிட்டு, முழு ஈடுப்பாட்டுடன் சாப்பிட்டு பாருங்கள், அதன் பிறகு உங்களுக்கு தோல்வியே வராது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

avoidable food in the morning

காலையில் இந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள் காலையில் நாம் சாப்பிடக்கூடிய முதல் உணவு என்ன என்பதை தேர்வு செய்வதில் அலட்சியம் காட்டக் கூடாது. நாம் முதலில் சாப்பிடக் கூடிய உணவு நம் உடலுக்கும், உள்ளுறுப்புகளுக்கும் அந்த நாள்...
ஜாதகத்தில் உள்ள யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #11

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் அனுபவிக்கும் இன்பமாகும். இதை தான் நம் முன்னோர்கள் 'திணை விதைத்தவன் திணையை அறுவடை செய்வான்" என்று சொன்னார்கள். செய்த வினையை...
செல்வம் பெருக

கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது  இதை செய்தால் போதும்  நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும்...
fruits kanavil vanthal

பழங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பழங்கள் கனவில் வந்தால் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. தூக்கத்தில் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விடை தெரியாத கனவுகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த...
செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம் தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ பட்டை – 1 துண்டு புளி – சிறிதளவு தனியாத் தூள் – ½ ஸ்பூன் மிளகாய்த் தூள் – ½...
சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்...

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்

கண்களை பாதுகாக்கும் உணவுகள்  ஒருவரின் கண்களை பார்த்தே அவர்களின் உடல் ஆரோக்கியத்தை நாம் கணித்து விடலாம். மனித உடலில் இருக்கும் அனைத்து பாகங்களுமே மிக முக்கியமானதுதான். அதில் எந்த ஒரு உறுப்பு பழுதடைந்தாலும் முதலில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.